Monday, March 23, 2020

4 மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்: இந்தியா முழுவதும் இன்று அமல்

Updated : மார் 23, 2020 01:13 | Added : மார் 23, 2020 01:12

புதுடில்லி: கொரோனா பரவலால் இன்று முதல் வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது.



கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை இருக்கலாம்.



பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது. இத்தகைய விதிமுறைகள் இன்று 23ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில தினங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024