பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
By DIN | Published on : 02nd March 2020 05:07 PM
By DIN | Published on : 02nd March 2020 05:07 PM
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் இரண்டு பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் அட்டைகள் அனைத்தும் செயலிழந்ததாகிவிடும். அதே சமயம், செயலிழந்த பான் எண்களைப் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், யாராவது செயலிழப்பு செய்யப்பட்ட பான் அட்டையைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை, ஆதாருடன் இணைக்காத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும், பான் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்வது, சொத்து வாங்குவது விற்பனை செய்வது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
எனவே, பான் எண்ணுடன் ஆதாரை இணைத்த பிறகுதான் இவற்றை மேற்கொள்ள இயலும். ஏற்கனவே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை கால நிர்ணயம் விதிக்கப்பட்டு பிறகு தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment