Sunday, April 12, 2020


சிங்கப்பூரின் அனைத்துக் கடற்கரைகளும் மூடப்படும்: அமைச்சர் வோங் 

11/4/2020 19:35 
beaches closed
beaches closed

beaches closed https://seithi.mediacorp.sg/image/4430046/1586604863000/large16x9/768/432/beaches-closed.png
 
சிங்கப்பூரில் உள்ள அனைத்துக் கடற்கரைகளும் மூடப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தமது Facebook பதிவில் தெரிவித்துள்ளார்.

COVID-19 கிருமிப் பரவலை முறியடிக்கும் நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வெளிப்புற இடங்களில் பாதுகாப்பான இடைவெளியைப் பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம். இருப்பினும் பொதுமக்களை அதனைப் பின்பற்ற வைப்பது கடினமாக உள்ளது. எனவேதான் நடைமுறைகளைக் கடுமையாக்கியுள்ளோம். நேற்று பொதுப் பூங்காக்களில் சில பகுதிகளை மூடினோம்.இன்று கடற்கரைகள் மூடப்படுகின்றன.  என்றார் திரு. வோங்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, சாங்கி கடற்கரைப் பூங்கா, பாசிர் ரிஸ் பூங்கா, செம்பவாங் பூங்கா ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகள் மூடப்படும் என்று தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது. பொதுமக்கள் அங்கு ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பது அதன் நோக்கம்.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் வெற்றிடைய அனைவரும் தங்களது வெளிப்புறத் தொடர்புகளைக் குறைத்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வோங் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

RGUHS must train evaluators, provide key answers: Court

RGUHS must train evaluators, provide key answers: Court  TIMES NEWS NETWORK 12,04,2025 Bengaluru : The high court has said the Rajiv Gandhi ...