சேலத்தில் இரு கர்ப்பிணிகள் உட்பட 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
24.04.2020
சேலம் மாவட்டத்தில் தாய், மகன், இரு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் வரை கரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 14 பேரில் நேற்று 4 பேர் குண மடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் தாதகாப்பட்டியில் ஒரு பெண், அவரது மகன் மற்றும் கருமந்துறை மலைக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், மேட்டூர் மற்றும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் கிச்சிப்பாளை யத்தைச் சேர்ந்த ஒருவர் தவிர மற்ற 4 பேருக்கும் கரோனா பாதிக்கப் பட்டவர்களின் நேரடி தொடர் புகள் ஏதுமின்றி தொற்று ஏற் பட்டிருப்பதால், இதுகுறித்து சுகா தாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலருக்கு கரோனா
கோவை மாவட்டம் கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு பட்டாலியன் போலீஸார் 90 பேர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சேலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த 27 வயதுடைய காவலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவருடன் பணிபுரிந்த சக காவலர்கள் உள்ளிட்ட 111 பேர் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment