அண்ணா பல்கலை தேர்வு தள்ளிவைப்பு
Added : ஏப் 09, 2020 22:27
சென்னை : அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளின், செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அண்ணா பல்கலையில், வரும், 18ல் துவங்குவதாக இருந்த, செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், இணைப்பு கல்லுாரிகள் என அனைத்திலும், ஏப்., மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும், செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment