ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிவாரணம்
Added : ஏப் 09, 2020 23:01
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ், 3 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.இது குறித்து, 'டுவிட்டரில்' லாரன்ஸ் கூறியுள்ளதாவது:ரஜினியின் ஆசியோடு, 'சந்திரமுகி - 2' படத்தில், நான் நடிக்கிறேன்; பி.வாசு இயக்குகிறார்.
படத்திற்காக பெறப்பட்ட தொகையில், 3 கோடி ரூபாய், கொரோனா நிவாரணத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்காக, தலா, 50 லட்சம் ரூபாய் வீதம், 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.'பெப்சி' சினிமா தொழிலாளர் அமைப்புக்கு, 50 லட்சம் ரூபாயும், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு, 50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்காக, 25 லட்சம் ரூபாய்; சென்னை, ராயபுரம் சுற்றுவட்டார தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்காக, 75 லட்சம் ரூபாய் என, மொத்தம், 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment