Sunday, April 12, 2020

மருத்துவக் கல்லுாரியில் மத சின்னம் நீக்கம்

Added : ஏப் 11, 2020 23:55

நாகர்கோவில் : நாகர்கோவில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இருந்த மதசின்னம் நீக்கப்பட்டது.

தமிழகத்தில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட மதசின்னம் வைக்கப்பட்டது. மதம் சார்ந்த வசனங்களும் எழுதி வைக்கப்பட்டது. இங்கு பிரார்த்தனைநடத்தவும் வசதி செய்யப்பட்டது.

இதற்கு பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இதுபோன்ற ஏற்பாடுகள் தேவையற்றது என்று கூறி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி மதசின்னம், வசனங்கள் நீக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...