கிராமத்தினருக்கு உணவளித்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள்
Added : ஏப் 11, 2020 23:50
சென்னை : கிராமங்களில் உணவின்றி தவிக்கும், 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவால், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், வேலை இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர் குடும்பங்கள், உணவின்றி தவித்து வருகின்றன. இத்தகவல் அறிந்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் ஒருங்கிணைந்து, தினமும் கலவை சாதம் தயாரித்து, கிராமங்களுக்கு வாகனம் மூலம் கொண்டு சென்று, வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.இதன்படி, குமராட்சி ஒன்றிய பேராம்பட்டு, ஜெயங்கொண்டப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு, பாஸ்கர் தீட்சிதர் தலைமையில், நேற்று உணவு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment