பண்டிகை காலம் அல்ல; இது பட்டினி காலம்!'
Added : ஏப் 11, 2020 23:09
சென்னை : உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதை சாதகமாக பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்பதை தடுக்க, 'இது, பண்டிகை காலம் அல்ல; பட்டினி காலம்' என, பலரும் சமூக வலைதளங்களில், வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில், கொரோனா பரவுவதை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகளில், வசதி படைத்தவர்கள், இரண்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை, மொத்தமாக வாங்கி செல்கின்றனர். சில வியாபாரிகள், உணவு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி, வேண்டுமென்றே, அதிக விலைக்கு விற்கின்றனர். இதையடுத்து, 'வியாபாரிகளே... அதிக விலைக்கு விற்க, இது பண்டிகை காலம் அல்ல; பட்டினி காலம்.
ஒருவரின் சாப்பாட்டை, 10 பேர் சாப்பிடலாம்; 10 பேரின் சாப்பாட்டை, ஒருவரால் சாப்பிட முடியாது' என்பது போன்ற வாசகங்களை, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் வாயிலாக, நியாயமான விலையில் பொருட்களை விற்குமாறு, வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment