Sunday, April 12, 2020

மனைவிக்காக 120 கி.மீ., சைக்கிள் ஓட்டிய முதியவர்

Added : ஏப் 12, 2020 00:00

தஞ்சாவூர் : புற்றுநோய் சிகிச்சைக்காக, மனைவியை, 120 கி.மீ., துாரம் சைக்கிளில் அழைத்துச் சென்ற, 60 வயதுமுதியவரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 60; கூலி தொழிலாளியான இவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா, 39.இவருக்கு, ஆறு மாதங்களுக்கு முன், கன்னத்தில் புற்றுக் கட்டி உருவானது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வந்த அவரை, மார்ச், 31ம் தேதி, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தனர்.ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து முடங்கிய நிலையில், மார்ச், 29ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, மனைவியை சைக்கிளில் அமர வைத்து, புதுச்சேரிக்கு புறப்பட்டார் அறிவழகன்.

அணைக்கரை, வடலுார், கடலுார் வழியாக, 120 கி.மீ.,யை கடந்து, இரவு, 10:45 மணிக்கு, மருத்துவமனைக்கு சென்றனர்.கொரோனா தொற்று காரணமாக, வெளிப்புற சிகிச்சைபிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருந்த ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.ஆனாலும், அறிவழகன் சைக்கிளிலேயே மனைவியை அழைத்து வந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், மறுநாள் காலை முதல், இரண்டு நாட்கள் தங்க வைத்து சிகிச்சை அளித்தனர். டாக்டர்கள் சொந்த செலவில் அவர்களுக்கு உணவு, மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து, ஆம்புலன்சில் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அறிவழகன் கூறியதாவது:முதல் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மஞ்சுளாவை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அவள் வலியால் துடித்ததை பார்க்க முடியாமல், சைக்கிளிலேயே அழைத்து சென்றேன்.வழியில் தடுத்த போலீசாரிடம், மருத்துவ சீட்டை காண்பித்ததால், விட்டு விட்டனர். சில இடங்களில், போலீசார் டீ, சாப்பாடு கொடுத்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்து, மனைவியை நிச்சயம் காப்பாற்றி விடுவேன்.மனைவிக்கு சிகிச்சை அளிக்க அறிவழகன் எடுத்த முயற்சியை, பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சிகிச்சைக்கு உதவ நினைத்தால், 91505 41339 என்ற மொபைல் எண்ணுக்கு அழைக்கலாம்.படம் உண்டு...--------

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...