Sunday, April 12, 2020


'மக்களுக்கு தந்தால் கடவுளுக்கு சேரும்'

Added : ஏப் 12, 2020 02:12 |
 'மக்களுக்கு தந்தால் கடவுளுக்கு சேரும்'

சென்னை: ''கடவுளுக்கு கொடுக்கும் போது, அது, மக்களுக்குப் போய் சேராது; மக்களுக்கு கொடுக்கும் போது, அது, கடவுளிடம் போய் சேரும்,'' என, நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி: நான் கொடுத்த, 3 கோடி ரூபாய் நிதியுதவிக்கு, பலரும் வாழ்த்தினர். இதன் பின், சண்டை கலைஞர்கள், உதவி இயக்குனர்கள், பொது மக்கள் என, பலரும் இன்னும் உதவிகள் செய்யுமாறு கோருகின்றனர். அதையெல்லாம் பார்த்த போது, எனக்கு இதயமே நொறுங்கி விடுவது போல இருந்தது.

இதற்கெல்லாம், நான் கொடுத்த, 3 கோடி ரூபாய் போதாது.என்னைப் பொறுத்தவரையில், கடவுளுக்கு கொடுக்கும் போது, அது, மக்களுக்கு போய் சேராது. ஆனால், மக்களுக்கு கொடுக்கும் போது, அது, கடவுளிடம் போய் சேரும். ஏனென்றால், கடவுள் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கிறார்.கடவுள், என்னை வீட்டில் உட்கார வைத்திருக்கிறார் என, நினைத்தேன், ஆனால், சேவை செய்வதற்கான வேலையை கொடுத்திருக்கிறார்.

இது, அனைவருக்கும் கடினமான காலகட்டம். எனவே, சேவை செய்வதற்கு, இது தான் சரியான தருணம்.எனவே, மக்களுக்கும், அரசுக்கும், என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என, நினைத்துள்ளேன். இப்போது, நான் கொடுத்த, 3 கோடி ரூபாய் அல்லாமல், மேலும், பல உதவிகளை செய்ய இருக்கிறேன்.இவ்வாறு, லாரன்ஸ் கூறினார்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...