Sunday, April 12, 2020

நிலாச்சோறு, பூண்டு துவையல், மிளகு ரசம்
Added : ஏப் 12, 2020 00:23

நாகர்கோவில் : நிலா சோறு சாப்பிடுவது மஞ்சள் வேப்பிலையில் குளியல் பூண்டு மிளகில் சமையல் என கொரோனா மக்களை பாட்டி காலத்துக்கு மாற்றியுள்ளது.

கொரோனாவால் சில நல்ல விஷயங்களும் நடக்க துவங்கியுள்ளது. அந்தக்காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வாசலில் தண்ணீரில் கை கால் கழுவி துடைத்த பின்னரே உள்ளே நுழைவர். காலம் மாறி அதெல்லாம் மறக்கப்பட்டது. காலணியுடன் படுக்கையறை வரை சென்றனர். சரியாக கை கழுவுவது கூட இல்லை. கொரோனா இன்று பழைய காலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. வீட்டுவாசலில் வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு கை கால் கழுவுவது ஒரு கடமையாகியுள்ளது.ஊரடங்கு மொட்டை மாடியில் நிலாச்சோறு சாப்பிடும் வாய்ப்பை அளித்துள்ளது.

குடும்பத்துடன் நீண்ட நேரம் பேச முடிகிறது. அலைபேசி மீது கூட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.பீட்சா பர்கர்களிடமிருந்து விலகி பூண்டு துவையல் இஞ்சி பச்சடி அவியல் மிளகு ரசம் என்று ருசிக்க தொடங்கியுள்ளனர். சித்தா ஆயுர்வேத மருத்துவ மகத்துவம் புரிகிறது. கொரோனாவால் உயிரிழப்பு பொருளாதார இழப்பு போன்ற மோசமான தாக்கங்கள் ஏற்பட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவு பழக்கம் நல்ல பண்புகளை கொடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும் கை கழுவுதல் இயற்கை உணவு உட்கொள்தல் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...