ரேஷன்,'டோக்கன்' தேதி மாற்றம்
Added : ஏப் 24, 2020 00:03
சென்னை:ரேஷன் கடைகளில், இலவசமாக உணவுப் பொருட்கள் வாங்க, 'டோக்கன்' வழங்கும் தேதி, மே, 2க்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள், இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால், கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று, எந்த தேதி, என்ன நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய, டோக்கன்களை, ரேஷன் ஊழியர்கள் வழங்க உள்ளனர்.
அதன்படி பொருட்கள் வாங்க, இன்றும் நாளையும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவரவர் வீடுகளில், 'டோக்கன்' வழங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், அதற்கு பதிலாக, மே, 2 மற்றும், 3ம் தேதிகளில், 'டோக்கன்' வழங்கப்படும் என, நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மே, 4ம் தேதியிலிருந்து, அத்தியாவசிய பொருட்கள், பொது மக்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment