மூன்று லட்சம் பேர் ரூ.1,000 வாங்கவில்லை
Added : ஏப் 22, 2020 00:08
சென்னை:ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் என, நேற்று வரை, 1,980 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தமிழகத்தில், 2.01 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாயுடன், இம்மாதத்திற்கு உரிய ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன.இவற்றை வாங்க விரும்பாதவர்கள், பொது வினியோக திட்ட இணையதளம் வாயிலாக, அரசுக்கு விட்டு கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.
நேற்று வரை, 1.98 கோடி கார்டுதாரர்களுக்கு, 1,980 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 3,000 பேர் நிவாரணம் வேண்டாம் என, அரசுக்கு விட்டு கொடுத்துள்ளனர். நிவாரண தொகை வாங்காதவர் கள், வரும், 30ம் தேதி வரை வாங்கலாம் என, உணவு துறை தெரிவித்துள்ளது.ஏற்கனவே, பொங்கல் பரிசு தொகுப்பை, 2 லட்சம் கார்டுதாரர்கள் வாங்காத நிலையில், தற்போது, 3 லட்சம் கார்டுதாரர்கள், தற்போதைய நிவாரணத்தையும் வாங்காமல் உள்ளனர்.
No comments:
Post a Comment