எம்.பி.பி.எஸ்., உள் ஒதுக்கீடு நிபுணர் குழு ஆலோசனை
Added : ஏப் 22, 2020 00:48
சென்னை:அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு ஆய்வு நடத்தியது.
தமிழக பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு எழுத வேண்டும். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, ஆய்வு செய்வதற்கு, உயர் நீதிமன்ற நீதிபதி, கலையரசன் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, ஏற்கனவே இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியது. நேற்று, மூன்றாம் முறையாக கூடியது.அப்போது, மாணவர்களின் பட்டியலை, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்ட பின், மருத்துவ கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக, நிபுணர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment