வீட்டில் 3; ஆபீசில் 3 நாள் அண்ணா பல்கலை திட்டம்
Added : மே 16, 2020 23:59
சென்னை : வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலும், மூன்று நாட்களும் வீட்டில் இருந்தும் பணியாற்றுமாறு, பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
'தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அண்ணா பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒவ்வொரு பிரிவு பணியாளரும், பேராசிரியர்களும், வாரந்தோறும் மூன்று நாட்கள், அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ள மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும்.இந்த வேலை நாட்களை, தொடர்ந்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில், அலுவலக பணிக்கு வருமாறு அமைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment