Wednesday, November 11, 2020


191 உயர் சிறப்பு டாக்டர்கள் கொரோனா தடுப்புக்கு நியமனம்

Added : நவ 11, 2020 00:59


சென்னை:கொரோனா தடுப்பு பணிக்காக, 191 உயர் சிறப்பு டாக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுதும், கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், பண்டிகை காலங்களில் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை குறைக்கக்கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கொரோனா தடுப்பு பணிக்காக, 191 உயர் சிறப்பு டாக்டர்களை, மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில், தமிழக அரசு நியமித்து உள்ளது.

சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, 40 பேர்; கிண்டி கிங்ஸ் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு, 50 பேர்; புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரிக்கு, 20 பேர்; திருவள்ளூர் மருத்துவ கல்லுாரிக்கு, 21 பேர்; கோவை, இ.எஸ்.ஐ., - கரூர், ஈரோடு மருத்துவ கல்லுாரிகளுக்கு, தலா, 10 என, 191 உயர் சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மேலும், முதுநிலை பட்டம் பெற்ற, ௫௪௭ டாக்டர்களும், தமிழகத்தில் உள்ள, 37 மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024