Wednesday, November 11, 2020

ஜோ பைடன் கொரோனா குழுவில் மொடக்குறிச்சி பெண் டாக்டர்


ஜோ பைடன் கொரோனா குழுவில் மொடக்குறிச்சி பெண் டாக்டர்

Updated : நவ 11, 2020 00:44 | Added : நவ 11, 2020 00:43

ஈரோடு : அமெரிக்க அதிபராக தேர்வான, ஜோ பைடனின் கொரோனா கட்டுப்படுத்தும் குழுவில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட பெண் டாக்டர் இடம் பெற்றுள்ளார்.அமெரிக்காவின், புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், தன் பதவியேற்புக்கு முன்னதாக, கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். இதில், மூவர் தலைமையில், 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆராய்ச்சி பணி

தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியும், குழு உறுப்பினராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் டாக்டர், செலின் ராணி கவுண்டர், 35, என்பவரும் இடம் பெற்றுள்ளனர்.செலின் ராணி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி, பெருமாபாளையத்தைச் சேர்ந்தவர். இவர், நியூயார்க் பல்கலையில் உள்ள, கிராஸ்மேன் மருத்துவக் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், அமெரிக்க நாட்டின் காசநோய் தடுப்பு பிரிவில், துணை இயக்குனராகவும் பணிபுரிகிறார்.இவர், 1998 முதல் 2012 வரை தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், எச்.ஐ.வி., தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.மேலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்தும், இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்துள்ளார்.

'ராஜ் பவுண்டேஷன்'

செலின் ராணி பற்றி, அவரது பெரியப்பா மகனான, ஈரோட்டில் வசிக்கும், ஓய்வு பெற்ற, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் தங்கவேல் கூறியதாவது:என் சித்தப்பா ராஜ் கவுண்டர். இவர், 1966ல் அமெரிக்கா சென்று, அந்நாட்டு விமான நிறுவனத்தில் பணி செய்து, அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணை, காதல் திருமணம் செய்து, அங்கேயே வசிக்கிறார்.

இவருக்கு மூன்று பெண்கள்; மூத்தவர், செலின் ராணி.இவர், அமெரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்து, பணி செய்கிறார். இருப்பினும், 'ராஜ் பவுண்டேஷன்' என்ற அமைப்பை, மொடக்குறிச்சியில் துவங்கி,நான்கு முறை மொடக்குறிச்சிக்கு வந்துள்ளார்.மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மேம்பாட்டுக்காக, பல்வேறு உதவிகள் செய்துள்ளார். செலின் ராணியின் கணவர் கிராண்ட், அமெரிக்காவில் உள்ள பத்திரிகை ஒன்றில் பணிபுரிகிறார்.செலின் ராணி, அமெரிக்க அதிபர் அமைத்துள்ள குழுவில், இடம் பெற்றதன் மூலம், மொடக்குறிச்சி பகுதி மக்கள் பெருமை அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...