Tuesday, January 5, 2021

மத்திய அமைச்சர் அமித் ஷா 14ம் தேதி சென்னை வருகை





தமிழ்நாடு

மத்திய அமைச்சர் அமித் ஷா 14ம் தேதி சென்னை வருகை

Added : ஜன 05, 2021 00:12

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும், 14ம் தேதி சென்னை வர உள்ளது, அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த நவ., 21ல், சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வெளியே, காரிலிருந்து இறங்கி, சாலையில் சிறிது துாரம் நடந்து சென்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.அவர் பங்கேற்ற அரசு விழாவில், அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி தொடர்வதாக, முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர். ஆனால், அமித் ஷா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டார்.

பா.ஜ., தரப்பில், முதல்வர் வேட்பாளரை, தேசிய தலைமை தான் அறிவிக்கும் என, மாநில நிர்வாகிகள் கூறியதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்குவதில் இருந்து பின்வாங்கிய பின், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி உறுதியாகி உள்ளது. இரு தரப்பிலும், தொகுதி பங்கீடு குறித்து ரகசிய பேச்சு நடந்து வருவதாக, தகவல் வெளியானது. அதேநேரம், ரஜினி முடிவை மாற்றவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 14ம் தேதி நடக்க உள்ள, 'துக்ளக்' வார இதழ் ஆண்டு விழாவில், அமித் ஷா பங்கேற்க, சென்னை வருகிறார்.

அன்று அவர், பா.ஜ., நிர்வாகிகளை சந்திப்பதுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் ரஜினியை சந்தித்து பேச உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.கடந்த முறை அவர் வந்த போது, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி உறுதியானது. இம்முறை வருகையின்போது, அமித் ஷா, எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024