Wednesday, September 7, 2016

ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வி அமைச்சர்!


‘வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா?’ என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem). இன்று ‘பிரான்ஸின் புதிய முகம்’ எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம்புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.

எதையும் சந்திப்பேன்!

பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப்பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.

பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் (Institut detudes politiques de Paris) 2002-ல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலுவோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005-ல் தம்பதிகள் ஆனார்கள்.

புதிய திறப்பு

அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன. இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள்கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002-ல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003-ல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004-ல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.

2008-ல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012-ல் பெண்கள் அமைச்சகத்தின் அமைச்சரானார். 2013-ல் தன்பாலின உறவாளர்களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீகரித்ததை “இது வரலாற்று முன்னேற்றம்” என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அதை அடுத்து, நகர்சார் விவகாரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.

சாதனைப் பெண்

2014-ல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறிபோயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக்காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014-ல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாகமூட்டும் புதிய முகம்தான்!

50 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் அண்டா ஃப்ரீ..!- இது புது கலாட்டா!



அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகளை அணிவதை விட நடுத்தரவர்க்கத்தினர் அடகு வைக்க அதிகம் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்க நகைகளுக்கு வழங்கப்படும் கடன் மதிப்பும் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை உரசிப்பார்த்து உடனடியாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இதில் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்க நகைகளுக்கு கடன் வழங்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து தனியார் வங்கிகள் தங்க நகைகளுக்கு கடனை அள்ளி கொடுக்கின்றன. சில வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் கூட தங்க நகைகளுக்கு கடன் வழங்குகின்றன.

இந்த போட்டி காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் (பான்புரோக்கர்ஸ்) பிசினஸ் இல்லாமல் தள்ளாட ஆரம்பித்து விட்டன. காரணம் வங்கிகளை விட இங்கு கூடுதல் வட்டி. வங்கிகளில் ஆயிரத்தெட்டு நடைமுறைகளுக்குப் பிறகே தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்படும். ஆனால், நிதிநிறுவனங்கள், அடகு கடைகளில் நடைமுறைகள் பெயரளவுக்குத் தான் இருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் போட்டி போட்டு தங்க நகைகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதால் அடகு கடைகளில் பிசினஸ் டல்லாகி விட்டதாக அதன் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அடகு கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்தியை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். வழக்கமாக ஜவுளி கடைகள் தான் பரிசு திட்டத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பார்கள். அதே நடைமுறையை செய்யாறு அடகு கடைக்காரர்கள் கடைப்பிடித்துள்ளனர். இதற்காக ஸ்கூட்டி முதல் டிபன் பாக்ஸ் வரை பரிசுகளை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்யாறு பகுதியில் பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எங்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்தால் பெரிய சில்வர் அண்டா இலவசமாக வழங்கப்படும். 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் பானை இலவசம். 10 ஆயிரத்துக்கு அடகு வைத்தால் எவர்சில்வர் பேஷன் இலவசம், 5 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் டிபன் பாக்ஸ் இலவசம் என்று அதிரடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் நகைகளுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். 1.11.2016ல் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.மகேஷ்

ராயல் என்ஃபீல்டு பைக் விலை கிடுகிடு ஏற்றம்!


இந்தியாவில் தான் விற்பனை செய்யும் பைக்குகளின் விலையை, ஆகஸ்ட் மாத இறுதியில் கணிசமாக உயர்த்தியது. இந்த புதிய விலைகள், செப்டம்பர் மாதம் முதலாக அமலுக்கு வந்துள்ளன. ஆக ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 1955 முதலாக இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்யும் ராயல் என்ஃபீல்டு, அதன் டிஸைனில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாதது மைனஸ்தான் என்றாலும், இந்த பைக்குகளுக்கான ரசிகர் வட்டம் காலப்போக்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனுடன் பைக்குகளுக்கான வெயிட்டிங் பீரியட்டும் அதிகரித்து வருவதை இங்கு சொல்லியாக வேண்டும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் புதிய சென்னை ஆன் ரோடு விலைப்பட்டியல் பின்வருமாறு;

350சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350: 1,23,228
ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரா 350: 1,38,992
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350: 1,47,833
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350: 1,59,401

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: 1,76,035

500சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500: 1,76,837
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500: 1,88,582
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 டெஸர்ட் ஸ்டார்ம்: 1,91,688
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 க்ரோம்: 2,00,371
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500: 2,02,007
ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி: 2,23,303

ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பர், ஆசிரியர்! #HappyTeachersDay


vikatan.com

நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள். அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். நம் அனைவருடைய மனத்திலும் ஆசிரியர் என்றால் படம் நடத்தி குழந்தையை மாநிலத்தில் முதல் மாணவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு அது தவிர பல விளக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஆசிரியர் அப்படி இருந்தால் நம் மனம் அவரை ஏற்க மறுக்கிறது. ஏன் என்றால் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நாம் விரட்டப்படுகிறோம். ஆனால் இன்றளவிலும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து வருகின்றனர். அப்படி ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தெரிந்துகொல்லுங்கள்!

கற்பிப்பதில் ஆர்வம்!

இதுதான் முதல், கற்பிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவர் அந்த ஆர்வத்தை தானகவே வெளிப்படுத்துவார். அப்படி ஆர்வம் உள்ளவரை நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த ஆர்வம் இருக்கும் ஒருவர் தன் வகுப்பில் எளிதாக பாடத்தை புரியவைத்துவிடுவார். இந்த ஆர்வம் மிக்க ஆசிரியர் தன் மாணவர்களை மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடவிடாமல் அறிவு என்ற பாதைக்கு அழைத்துச்செல்வார்.

மாணவர்களிடம் அன்பு!

ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களிடத்தில் அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் ஆசிரியரிடத்தில் மாணவர்களும் அன்பு செலுத்தலாம். ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அன்பை உணர்ந்திருப்பீர்கள். இந்த விதமான ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தாலே மாணவர்கள் தனிப் புத்துணர்வு அடைவார்கள். அவர் எடுக்கும் பாடத்திலும் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இதை அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் அது அன்பு தான்.


பாடத்துறையின் மீது காதல்!

தான் கற்பிக்கும் பாடத்துறையின் மீது காதல் கொண்ட ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பார். தான் விரும்பும் பாடத்தை பிறர் விரும்பும் வகையில், ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமையாக இருக்கும். மாணவர்களுக்கும் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படும்.


பள்ளியின் பொருள்!

ஒரு ஆசிரியர் பள்ளி எதற்கானது என்பது அறிந்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவன் வந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளில் 100 மதிப்பெண்களுக்கான‌ பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்று கூறும் இடம் அல்ல. இது மாணவனின் வாழ்க்கையின் ஒரு பொன்னான காலம்தான் பள்ளி படிப்பு. இந்த பருவத்தில் அவன் வளர்ச்சி பெற்று, அவனுடைய அடையாளத்தை அறிந்து அவனுக்கு எது செய்தால் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்து அதனை இலக்காக வைத்து ஓட வேண்டிய பருவம். ஆசிரியர்கள் அந்த மாணவனின் திரமையை கண்டறிய ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவன் திறமை வகுப்பறையில் வெளிப்படலாம் அல்லது விளையாட்டு மைதானத்தில் வெளிப்படலாம். இதை கண்டறிந்து அந்த மாணவனை ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியரின் கடமை.


விருப்பத்திற்கான மாற்றம்!

இது ஒரு சிறந்த ஆசிரியருக்கான ஒரு சிறந்த பன்பு. இந்த பன்பு உடைய ஆசிரியர் சிறப்பின் உச்சியில் உள்ளார் என்றே கூறலாம். ஆசிரியர் எப்போதும் தன் கற்ப்பித்தல் மூலமாக மாணவர்களை மற்றலாம் என்று எண்ணக்கூடாது. மாணவர்களுடன் கலந்துரையாடும்போது மாண‌வர்களுக்கு ஏற்ப தன்னை மற்றிக்கொள்ளவும் முன்வர வேண்டும். இது ஆசிரியர்களுக்கு ஒரு கடினமான காரியம் அல்ல. அப்படி தன்னை மற்றிக்கொள்ளும் மனம் ஆசிரியருக்கு வந்துவிட்டால் ஆசிரியர் மாணவரிடையே ஒரு சிறந்த உறவு உருவாகும்.


தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!

எத்தனை வருடம் இந்த ஆசிரியர் பணியில் இருந்தாலும் நாம் கற்றது கை மண் அளவே. நாம் கற்க வேண்டியது ஏறாலம் என்பது ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்த ஒன்று. நமக்கு தெரிந்ததுடன் நிருத்தாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த சவால்களுக்கு திறமையுடன் உழைத்து நல்ல தீர்வுகளையும் கண்டறிய வேண்டும்

இது மட்டும் அல்ல.இன்னும் பல உள்ளன. கற்றல் என்பது ஒரு குழு முயற்சி. அங்கு ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களுடன் உரையாடும் போது ஆசிரியர் ஒரு சக மாணவனாக அந்த மாணவனுடன் பேசிப் பழகவேண்டும். பொறுப்பு, கருணை, ஒத்துழைப்பு, படைப்பு,அர்ப்பணிப்பு, உறுதி, முன்மாதிரி, ஈடுபாடு, உத்வேகம், பறந்தமனம் போன்றவையும் ஆசிரியரின் உயரிய பண்புகளே.

மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மாபெரும் சக்தி ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்த தான் இந்த ஆசிரியர் தின விழா. அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முரளி.சு
மாணாவப் பத்திரிகையாளர்

மௌனராகம் 30: நினைவில் நகரும் கம்பளிப்பூச்சி!


கடந்த சில நாட்களாகவே ‘மெளன ராகம்’ திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன காரணமெனத் தெரியவில்லை. பிறகு ஒரு நண்பர் சொல்லித் தெரிந்தது. இது மெளன ராகத்தின் முப்பதாவது ஆண்டு! ஆம், 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியானது அத்திரைப்படம்.

ஏதேனும் ஒரு திரைப்படம் நம்மைக் கவர்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் நாம் அந்தப் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்வதுதான். என் வாழ்க்கையில் நான் அப்படித் தொடர்புபடுத்திக்கொண்ட சில திரைப்படங்களில் முதன்மையானது, முக்கியமானது, மௌன ராகம்.

இந்தப் படம் வெளியான அடுத்த வருடம் அதே ஆகஸ்ட் மாதத்தில் நான் பிறந்தேன். என் பால்யத்தில், கார்த்திக் போடும் சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். படத்தின் ஆகப் பெரும் பலம் கார்த்திக். “தான் நடித்தேன் என்று சொல்லிக்கொள்வதற்கு கார்த்திக்குக்கு இந்த ஒரு படம் போதும். ‘ஸீல் ஆஃப் யூத்’ என்பதை இந்தப் படத்தில் கார்த்திக் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். அதனை என்ஹான்ஸ் செய்ததில் இளையராஜாவின் இசைக்கும், பி.சி.ஸ்ரீராமின் கேமராவுக்கும் நிறைய பங்குண்டு” என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். இன்று வரையிலும் கார்த்திக் வரும் அந்தப் பகுதியைப் போல வேறு எந்தப் படத்திலும், எந்த இயக்குநரும் செய்யவில்லை. அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் கார்த்திக்கின் துள்ளல் வசனம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கார்த்திக் அறிமுகமாகும் காட்சி இந்தப் படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. அவர் தன் நண்பர்களுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே வரும்போது, கேமரா நிறைய ‘ஷேக்’ ஆகியிருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்தால், கார்த்திக் நம் எதிரில் வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

“கீழே ஒரு போர்வையை விரித்து அதில் பி.சி. ஸ்ரீராம் கேமராவுடன் படுத்துக்கொண்டார். நாங்கள் பின்னாலிருந்து அந்தப் போர்வையை இழுத்துக்கொண்டு செல்லச் செல்ல, கார்த்திக் அறிமுகமாகும் காட்சியை அவர் படமாக்கினார்” என்று திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதிய ‘கான்வர்சேஷன்ஸ் வித் மணி ரத்னம்’ புத்தகத்தில் தெரிவிக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் மணி ரத்னம்.

“திவ்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து முதலில் ஒரு சிறுகதை எழுதினேன். அதுதான் பிறகு திரைப்படமாக மாறியது” என்று மணி அதே புத்தகத்தில் சொல்கிறார்.

அப்படியான ஒரு பெண்ணை என்னுடைய இருபதுகளில் கடந்தபோது தான், இந்தப் படம் சொல்லவரும் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொண்டு பார்த்தேன்.

இது போன்ற சில தனிப்பட்ட காரணங்கள் பலருக்கும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும் தாண்டி அந்தப் படம் நம்மை ஈர்த்ததற்கு, இன்றும் ஈர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் படமாக்கம்.

ஏழை நாயகன், பணக்கார நாயகி. நாயகியின் திமிரை அடக்கி, தன்னிடம் காதலில் விழவைக்கும் நாயகன். நாயகியின் அப்பாவின் வில்லத்தனங் களை முறியடித்து, சில பாடல் காட்சிகள், ‘அபுஹாய்… அபுஹாய்’ எனப் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள், கொஞ்சம் சென்டிமென்ட் ஆகியவற்றுக்குப் பிறகு ‘சுபம்’ போடுகிற ரீதியிலான படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகரும் திரைக்கதையுடன் வந்த இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்!

கதை மிகவும் எளிமையானது. தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் நாயகிக்குத் திருமணம் நடக்கிறது. நாயகிக்கு ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ காதல் உண்டு. அதைத் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு, புதிய வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய சவால் நாயகிக்கு. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் அடிநாதம். அன்றைய காலத்தில் காதல் படங்களுக்கு கமல்ஹாசனிடம் ‘கால்ஷீட்’ கிடைக்கவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் அடுத்துத் தேர்வு செய்யும் நபர் மோகன். நாயகியை மையமாகக் கொண்ட இதுபோன்ற படத்தில் மோகன் நடித்தது உண்மையிலேயே ஆச்சர்யம்!

“சின்ன வயதிலிருந்து சுதந்திரமாக வளர்ந்த ஒரு பெண், பெற்றோர் பார்க்கிற ஆணை மணந்துகொள்வாள். முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் முதலிரவைக் கழிக்க நேரிடும். என் சிறுகதை அந்த முதலிரவைப் பற்றியதுதான். பின்னர் அந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தபோது ரேவதி சொல்லும் 'நீங்க தொட்டாலே கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' என்கிற வசனமும் அந்த முதலிரவைப் பற்றித்தான்” என்று பரத்வாஜ் ரங்கனுடனான உரையாடலில் தெரிவிக்கிறார் மணி.

திருமணமான முதல் நாளில் விவாகரத்தைப் பரிசாகக் கேட்கும் பெண், எந்த ஒரு கணவனுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியையே தருவார். நாயகியின் முன்பு கம்பளிப்பூச்சியாகக் குறுகிப்போய் நாயகன் கடக்கின்ற நாட்கள், வெளிப்படுத்த முடியாத அன்பு குறித்த கவித்துவமான சுயகழிவிரக்கம்!

பின்னர் ஒரு காட்சியில் “என்னைத் தொட்டா உனக்குத்தான் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கும்” என்று ரேவதியிடம் அவர் கொடுக்கும் பதிலடியில் அத்தனை காலம் தான் பொதித்து வைத்திருந்த ஆற்றாமையை, ஒரே வரியில் மோகன் கடந்துவிடும்போது நமக்குள்ளும் ஒரு பனிப்பாறை உடைக்கப்பட்டுவிடுகிறது.

இந்தப் படம் வெளியானதற்குப் பிறகு ‘மிஸ்டர் சந்திரமெளலி’ எனும் வசனம் எவ்வளவு பிரபலமானதோ, அதே அளவுக்கு அந்த ‘கம்பளிப்பூச்சி’யும் பிரபலமாகிவிட்டது. ‘மெளன ராகம்’ திரைப்படத்தை முதன்முறை பார்ப்பவர்களுக்கு கார்த்திக்கையும் அவருடைய இளமைத் துள்ளலையும் பிடிக்கும். அதே படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறவர்களுக்குக் கம்பளிப்பூச்சிதான் அதிகம் பிடிக்கும். ஏனென்றால், நம் எல்லோருக்குள்ளும் வெளிப்படுத்த முடியாத அன்பு, சுயகழிவிரக்கமாக நகர்ந்துகொண்டிருக்கிறது ஒரு கம்பளிப்பூச்சியைப் போல!

ரிலையன்ஸ் ஜியோ தொழில் ரகசியம் என்ன?


கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தான். பங்குச்சந்தை, தொலை தொடர்புத் துறை என அனைத்து ஏரியாக்களிலும் ஜியோமயம்தான். இனி குரல் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை, ஒரு ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே, மாணவர்களுக்கு 25 சதவீத சலுகை, இந்த வருடம் முழுவதும் இலவசம், அடுத்த வருடம் வரை 15,000 ரூபாய்க்கு இலவசமாக செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு புறம் எப்படி ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டும் என்ற சந்தேகமும் இருந்தன.

முகேஷ் அம்பானி இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சரிந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இந்த பங்கு சரிந்ததற்கும் முதலீட்டாளர்களிடையே நிலவிய எப்போது லாபம் ஈட்டும் என்னும் சந்தேகம்தான். காரணம் கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான். ஆனால் நீண்ட காலத்தில் கணிசமாக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்களை கூர்த்து கவனித்தால் இதில் உள்ள உத்தி தெரியும். குறைந்தபட்ச கட்டணம் 149 ரூபாய். இதில் 0.3 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

குரல் வழி கட்டணம் இலவசமாக இருந்தால் கூட 0.3 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலானவர் கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதற்கு அடுத்த திட்டத் துக்கு செல்ல வேண்டும் என்றால் 499 ரூபாய்க்குத்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அந்த திட்டத்தில் கூட 4ஜிபி மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஜிபி 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றால் 4ஜிபி எப்படி 499 ரூபாய்?

மேலும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ரூ.1,000-க்கு மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இடையில் எந்த விலையும் கிடையாது. 1,000 ரூபாய்க்கு கூட 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோல விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உத்தியை கடைபிடித்திருக்கிறது.

இன்னொரு விஷயம் இந்த அனைத்து திட்டங்களுமே 28 நாட்களுக்கானது. ஒரு வருடத்துக்கு 365 நாட்கள் என்னும் போது 13 முறை கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

எப்படி இலவசம்?

எப்படி குரல் அழைப்புகள் இலவச மாகக் கொடுக்க முடியும் என்பது அடுத்த கேள்வி? அனைத்து அழைப்புகளும் இணையம் வழியே செல்கிறது. உதார ணத்துக்கு வாட்ஸ்அப்-பில் நாம் எப் படி பேசுகிறோமோ அல்லது தகவல் அனுப்புகிறோமோ அதேபோல இங்கேயும். அதனால் குரல் அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது.

ஐடிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி 8 கோடி வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வசம் இருப்பார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் கட்டணம் 180 ரூபாய் என்ற அளவில் இருக்கும். அடுத்த மூன்று வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என தெரிவித்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டில் பிரேக் ஈவன் ஆகும் என கணித்திருக்கிறது.

எடில்வைஸ் நிறுவனம் கூறும் போது 500 ரூபாய்க்கு கீழ் இரு பேக்கேஜ் மட்டுமே இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் ரிலையன் ஸுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு. தற்போதைய தொலைதொடர்பு நிறு வனங்கள் பல திட்டங்களை வைத் துள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறது.

கோடக் செக்யூரிட்டீஸ் கூறும் போது ஆரம்பத்தில் இலவசங்களால் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிரமப்படுவது போன்ற சூழ்நிலை இருக்கும். வாடிக்கை யாளர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. நான்கு வருடங்களில் லாபம் சம்பாதித்தாலும் மொத்த முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு 7-10 வருடங்கள் கூட ஆகலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.

ரிலையன்ஸ் மீன் பிடிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் மொத்த குட்டையையும் குழப்பி இருக்கிறது. டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்னும் திட்டத்தை அறிவித்த போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுமாறின. அதன் பிறகு இப்போது…!

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக ஆதார் எண் உள்ளவர்கள் மட்டும் விவரம் அளித்தால் போதும்: உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Return to frontpage

பொது விநியோக திட்டத்தில் மின் னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக, ஆதார் எண் உள்ளவர் கள் மட்டும் விவரம் அளித்தால் போதுமானது என்று உணவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அனைவரது ஆதார் எண்ணையும் கேட்டு கட் டாயப்படுத்தக் கூடாது என கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 25,532 முழு நேரம், 9,154 பகுதி நேரம் என மொத்தம் 34,686 ரேசன் கடை கள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளின் மூலம், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது புழக்கத் தில் உள்ள குடும்ப அட்டைகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. இவை கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்கு பதில் புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அதற் கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய மக்கள் தொகை பதிவின் விவரங்களை பெற்று முதல்கட்ட மாக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரிட்சார்த்த அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழு வதும் பொது விநியோக திட்டப் பணிகளை கணினிமயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதை யொட்டியே, மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏதுவாக ஆதார் எண்களை உள்ளடக்கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரேசன் கடை களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப் படும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியில், குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகள் முடிந்ததும், பொதுவிநி யோகத் திட்ட பயனாளிகள் விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அதன் பின் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

இந்நிலையில், சில பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் விவரங்களை அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

மாவட்டம்தோறும் ‘பாயின்ட் ஆப் சேல்’ மின்னணு விவரப் பதிவு இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில இடங்களுக்கு வழங்கவேண்டி உள்ளது. இதில் பதிவாகும் விவரங்களை சேகரித்து, விவரத் தொகுப்பு தயாரிக்கப்படும். ரேசன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர் அளிக்கும் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் பதிவு இருக்காது. அவர் களுக்கு தேவையில்லை. அவர்கள் பெயர் விவரம் மட்டும் சேர்த் தால் போதுமானது. மேலும், அனைவரது ஆதார் எண் ணும் வேண்டும் என கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆதார் எண் கிடைக்கும்போது, பொதுமக்கள் அதை ரேசன் கடை அலுவலரிடம் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்கள் இணைக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய மின்னணு அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களில் தற்போது ரேசன் கடை ஊழியர்களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ இயந்திரங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்வது தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரங்கிமலை, சென்னை சைதாப்பேட்டை மண்டல பகுதிகளுக்கு நேற்று இயந்திரம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி, அரியலூர், பெரம் பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிப் படியாக இயந்திரங்கள் வழங்கப் பட்டு, ஆதார் இணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
Keywords: மின்னணு குடும்ப அட்டை, ஆதார் எண் உள்ளவர்கள், விவரம் அளித்தால் போதும், உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Tuesday, September 6, 2016

குறள் இனிது: ‘சிக்’கெனப் பிடிச்சுக்கணும்!


உங்களால் உண்ணாவிரதம், மௌன விரதம் போல கைபேசியில்லா விரதம் இருக்க முடியுமா?

ஒரு 21 வயது பெண், அவரது கைபேசி மூன்று மாதங்களுக்குப் பறிக்கப்பட்டும் கவலைப்படவில்லை என்றால் நம்பமுடிகிறதா?

ஆமாங்க நம்ம ரியோ ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்க நாயகி சிந்து தானுங்க அது!

அப்பா ரமணா வாலிபால் விளையாடப் போனால், உடன் செல்லும் 8 வயது சிந்து மெதுவாக பாட்மிட்டன் அரங்கிற்கு நழுவி விடுவாராம்!

அர்ஜுனா விருது வாங்கிய விளையாட்டு வீரரான ரமணா, தன் மகளை விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பியதால் சிந்துவிற்கு பாட்மிட்டன் பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்தார். 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடங்கிய வெற்றி தொடர்கதையானது. படிப்படியாக உலகத் தர வரிசையில் 10வது இடத்திற்கு முன்னேறினார்!

அவரது 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் ஆட்டத்தைப் பார்த்த யாரும் அவருடைய விசிறியாகாமல் இருக்க முடியாது... சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட!

ஆட்டம்னா ஆட்டம், அப்படி ஒரு ஆட்டம்! அரை இறுதியில் எதிராளியை சும்மா அங்குமிங்கும் ஓட வைத்துத் திணறடித்ததைப் பார்க்கணுமே!

இறுதி ஆட்டத்தில் அவர் எதிர் கொண்டவர் தர வரிசையில் முதலிடத்தில் இருந்த அனுபவசாலியான கரோலினா !

ஆனால் நம்ம சிந்து அஞ்சாமல் எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தில் வெற்றியும் பெற்றார். பின் இரு ஆட்டங்களினால் தங்கம் தவறிப் போனாலும், தானே ஒரு தங்கமென நிரூபித்து விட்டார்.

இந்தத் தன்னிகரில்லாத வெற்றிக்குக் காரணம் என்ன? 5'11" உயரமா? 13 வருட உழைப்பா? கோபிசந்தின் உன்னதப் பயிற்சியா?

இவையெல்லாம் கிடைக்கப் பெற்ற மற்றவர்கள் பலர் இருந்தும் இவரால் மட்டும் இது சாத்தியமானது ஏன்?

சிந்துவின் சமீபத்திய பேட்டிகளைப் பாருங்க புரியும்! இனி உலகின் நம்பர் 1 ஆவதற்காக உழைப்பாராம்! 2020-ல் டோக்கியோவில் தங்கம் வெல்லணுமாம்!

இந்தப் பெண்ணுக்கு வேறு நினைவே இல்லைங்க! இந்த விளையாட்டு அவரை ஆட்கொண்டு விட்டதுங்க!

அப்புறம் கைபேசி என்ன, ஐஸ்கிரீம் என்ன, காலை 4 மணித் தூக்கம் என்ன, பயிற்சிக்கு 56 கிமீ தூரம் என்ன?

மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்கின் கதையும் இதைப் போன்றது தான்! 10 வயதில் அவர் அதில் இறங்கிய பொழுது அவருடன் போட்டியிடப் பெண் வீரர்களைத் தேடணுமாம்!

அன்று தொடங்கிய வேட்கை 12 ஆண்டுகளாய்த் தொடர்ந்தது! ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வாங்கிக் கொடுத்துள்ளது!

விளையாட்டுத் தளமோ, வியாபாரக் களமோ அரிய வெற்றி பெறத் தேவை உள்ளுதல் எனும் இடைவிடாத எண்ணம்தான்!

திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து விடுமல்லவா?

ஒருவர் தான் செய்ய எண்ணியதையே எண்ணி எண்ணி அதற்கானவற்றிலேயே மனம் தோயப் பெறுவாராயின் அவர்தான் நினைத்ததை அடைவது எளிது என்கிறார் வள்ளுவர்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின் (குறள்: 540)

somaiah.veerappan@gmail.com

Thursday, September 1, 2016

எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது!


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பாக சரியான வழிகாட்டுதலை முன்வைத்து, அதில் காணப்படும் குறைகளை அகற்ற இந்தக் குழு முற்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான வழிகாட்டுதல் குழு, இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மீதான தடையை அகற்ற உத்தரவிட்டிருக்கிறது. தமது வழிகாட்டுதல்களையும் ஆணைகளையும் மருத்துவ கவுன்சில் மதிப்பதில்லை என்றும் அதன் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை என்றும் கடிந்து கொண்டிருக்கிறது.

லோதா வழிகாட்டுதல் குழுவின் ஆத்திரத்திலும் கண்டனத்திலும் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், அடிப்படை பயிற்றுவித்தல் வசதிகள் இல்லாமல் இருந்ததாலும், தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது என்பதாலும் 86 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இப்போது, லோதா தலைமையிலான குழு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவை நிறுத்தி வைத்து, அந்தப் பட்டியலில் உள்ள 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிபந்தனைகளுடன் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.

வழிகாட்டுதல் குழுவின் கட்டளைப்படி இந்திய மருத்துவக் கவுன்சில் அந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி குறித்து மறு ஆய்வு செய்யவில்லை என்பது லோதா குழுவின் குற்றச்சாட்டு. அதற்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி கொள்வதற்கான அனுமதியை வழங்குவது சரியான தீர்வு அல்ல.

86 மருத்துவக் கல்லூரிகளில் 26 கல்லூரிகளை எந்த அடிப்படையில் லோதா குழு தேர்வு செய்து அனுமதி வழங்குகிறது என்று பார்த்தால், அது அதைவிட விசித்திரமாக இருக்கிறது. நேரில் சென்று சோதனை நடத்தி இந்திய மருத்துவ கவுன்சில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அனுமதி மறுத்த கல்லூரிகளுக்கு, அந்த மருத்துவக் கல்லூரிகளின் இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் விவரங்களையும், புகைப்படங்களையும், குறிப்புகளையும் அடிப்படையாக வைத்து, அனுமதி வழங்க முற்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

மருத்துவ கவுன்சிலின் சோதனை குறித்து லோதா குழு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, விடுமுறை நாள்களில் அந்தக் கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டன என்பது. கட்டடங்கள் சரியாகக் கட்டப்பட்டுள்ளனவா, பரிசோதனைச் சாலை வசதிகள் முறையாக இருக்கின்றனவா, அந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் யார் எவர், அவர்களது கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள, எந்த நாளில் பரிசோதனை நடத்தினால்தான் என்ன?

மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி என்பது நீண்டதொரு நடைமுறையைக் கொண்டது. கட்டமைப்பு வசதி, யார் நிறுவுகிறார்கள், யார் நடத்தப்போகிறார்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன, பாடத்திட்டங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன, அதன் ஆசிரியர் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று பல அடுக்குப் பிரச்னைகளை ஆய்வு செய்துதான் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்தெல்லாம் லோதா குழு, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று நேரடியாக சோதனை நடத்தி, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி மறுத்தலை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திருந்தால் அது நியாயமான முடிவாக இருந்திருக்கும்.

86 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுத்திருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில், முதற்கட்ட சோதனையில் குறைபாடுகள் காணப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதற்காக அனுமதி அளித்தது என்பதுதான் லோதா குழு எழுப்பி இருக்கும் விசித்திரமான கேள்வி. அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைத் தட்டிக் கேட்கவும், குறைகளை மாற்றவும் வழியுண்டு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அப்படியா என்கிற அடிப்படைக் கேள்வியைக்கூட ஏன் லோதா குழு யோசிக்கவில்லை?

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைகள் இருக்கின்றன. அதைக் களைவதற்காகத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டி நீக்க லோதா குழுவுக்கு அதிகாரம் உண்டுதான். ஆனால், மருத்துவக் கல்லூரியின் தரம், மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு போன்றவற்றை சட்டம் படித்தவர்கள் நிர்ணயிக்க முடியாது. நீதிபதிகள் நியமனத்தை மருத்துவர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் நிர்ணயிப்பது போன்ற விபரீதமாகத்தான் அது அமையும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் குறைபாடுகளை அகற்ற லோதா குழு என்ன செய்தது, என்ன பரிந்துரைக்கிறது என்றால் எதுவுமே கிடையாது. குறைபாடுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சிலே, கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அனுமதி மறுத்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி லோதா தலைமையிலான குழு அனுமதி வழங்குகிறது என்பதே, அந்தக் குழுவின் முடிவுகள் குறித்து நம்மை சந்தேகப்பட வைக்கிறது.

மாற்றாக ஓர் அமைப்பு உருவாக்கப்படும்வரை, இதுபோன்ற பிரச்னைகளில் இந்திய மருத்துவ கவுன்சிலை அகற்றி நிறுத்திவிட்டு, முடிவெடுப்பது புத்திசாலித்தனம் ஆகாது!

தலையாட்டி பொம்மைகள்!


அலுவலகங்களில் சிலர், தமது வேலையினை திருத்தமாகச் செய்வர். தானுண்டு - தம் வேலையுண்டு என்றிருப்பர். பிறர் பற்றி பேசாது - குறை கூறாது இருப்பர். குறிப்பாக, அவர்களது மேலாளருக்கு கூழைக் கும்பிடு போடமாட்டார். அதனால், அவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது.

வேறு சிலர், வேலை செய்வது இல்லையெனினும், தங்களது மேலதிகாரியின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்கள். அவர்கள் தேவையை அறிந்து பூர்த்தி செய்வர். குறிப்பாக, அவர்களை புகழ்ந்து பேசுவதை ஒரு கலையாகப் பயின்று, அவர்களை மயக்கிவைத்திருப்பார்கள்.

இன்னும் சிலர், மேலதிகாரிகள் சொல்வதற்கெல்லாம் சரி என்று தலை ஆட்டுவார்கள்.. ஆமாம் போடுவார்கள்..

இப்படிப்பட்டவர்களுக்கும், சில மேலதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல்லெண்ணத்தை சம்பாதிப்பார்கள். பதவி உயர்வு, சலுகைகள், ஊதிய உயர்வு, சுலபமான வேலை என இன்னும் பலவித சலுகைகளை பெறுவர்.

இவர்கள் சுயநலமிகள், முகஸ்துதி செய்யும் துதிபாடிகள், "ஆமாம்சாமி'கள் எனப்படுவர். சில இடங்களில், இந்தத் துதிபாடல் விஸ்வரூபம் எடுக்கும். ஓர் அடிவருடி பலன் பெறுவதைப் பார்த்து, இன்னொருவர் அதனைப் பார்த்து இன்னொருவர் என, பொய் புகழுரை கூறுவோர் கூட்டமும் அதிகரிக்கும். துதிபாடுவோர் கூட்டம் பெருகி, திறமைசாலிகள் வலுவிழக்கும் சூழல் ஏற்படும்.

அதன் விளைவு, ஒருவரை ஒருவர் விஞ்ச எத்தனிப்பர். இத்தகைய முகஸ்துதி செய்யும் ஆமாம்சாமிக் கூட்டம், விளைச்சல் நிலத்தில், நல்ல பயிருக்குள் இருக்கும் களையைப் போன்றது.

ஒரு நிறுவனத்தில் மலிந்து கிடக்கும் துதிபாடிகள், ஆமாம்சாமிகள் ஏற்படுத்தும் அடிவருடித்தனம் என்பது நிர்வாகத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு சிலர் பலன் பெறுவர் - பலர் பாரபட்சமாக நடத்தப்படுவர்.

வேலைக்கும் திறமைக்கும் பலன் இன்றி, தெரிந்தவர் - மேலதிகாரியைச் சுற்றியிருக்கும் கூட்டம் பலன்பெறும். பல ஊழியர்களுக்கு பெரும் வெறுப்பு, மனத்தளர்ச்சி தோன்றவும் காரணமாக அமையும். திறமைசாலிகள் பிற நிறுவனங்களில் வேலை தேடும் நிலையை ஏற்படுத்தும்.

சிறிய அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமன்றி, பெரிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்கூட இத்தகைய பிரச்னைகளை சந்திப்பதுண்டு. ஆனால், அவர்கள் இந்த பிரச்னைகளே, தலையெடுக்காத வண்ணம் சரியான முறையில் அணுகுவார்கள் அல்லது இத்தகைய களைகளைக் களைந்து விடுவர்.

அந்நிறுவனங்கள், பொறுப்பான பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும்போதே துதிபாடுதலும், ஆமாம்சாமி போடுதலும் தங்கள் நிறுவனத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதனை தெளிவுபடுத்தி விடுவார்கள்.

உதாரணமாக, புதிதாக வேலைக்கு நேர்முகம் மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடத்தும்போது, அந்த விண்ணப்பதாரர்களின் மனப்பாங்கு மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைக் கண்டுபிடித்து வடிகட்டிவிடுவார்கள்.

மேலும், நிறுவனத்தில் தவறுகள் நிகழும்போது, அவற்றை செய்தவர்கள் தங்கள் மேல் அதிகாரியாக இருந்தால்கூட, சுட்டிக்காட்டத் தயங்காதவர்களா என்று தேர்வின்போது சோதிப்பதும் வழக்கம்.

இதன்மூலம், நிறுவனத்தில் திறமைக்கு மட்டுமே மதிப்பு என்பதனை தெளிவுபடுத்திவிடுவார்கள். ஒரு பிரபல இந்திய நிறுவனம், தனது விளம்பரத்தில் தங்கள் உயர் அதிகாரியிடம் முடியாது என்று சொல்லக்கூடிய துணிவு மிக்கவர்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்துக்கு தேவை (we need people who can say NO to their boss)என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

சில பன்னாட்டு நிறுவனங்களில், பலரும் பங்கு பெரும் கூட்டங்களிலும் - கருத்து பரிமாற்றங்களிலும், விளக்கம் கேட்பது, எதிர்கேள்விகள் அல்லது மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது என்பவை ஊக்குவிக்கப்படும். அது அந்த நிறுவனத்தின் கலாசாரமாக இருப்பது தெரியவரும்.

அதனால், வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள்கூட தமது மாற்றுக் கருத்துகளை துணிந்து வெளியிடுவர், கேள்விகள் கேட்பர். மூத்த நிர்வாகிகள் அந்த எதிர் கேள்விகளில் நியாயம் இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளுவர். இல்லாதுபோனால், அதற்குரிய விளக்கம் கொடுத்து மறுத்து விடுவர்.

இதன்மூலம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான சூழலை ஏற்படுத்துவார்கள் (ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் பொதுகுழுவில் இப்படி ஒரு உறுப்பினர் கேள்வி கேட்பதையோ அல்லது அதற்கு தலைவர்கள் பதில் கூறுவதையோ நினைத்துப் பார்க்க முடியுமா?).

ஆக, சிறந்த தொழில்முறை நிறுவனங்கள், இத்தகைய அடிவருடித்தனத்தை கட்டுபடுத்த, துதிபாடிகளையும் ஆமாம்சாமிகளையும் தொலைதூரத்தில் வைக்க, தங்களது செயல்முறை அமைப்புகளில் போதுமான தடை மற்றும் கட்டுப்பாடுகளை (Checks and balances)ஏற்படுத்திக் கொள்ளுகின்றன.

இத்தகைய முகஸ்துதி செய்வோரையும், ஆமாம்சாமிகளையும் அவர்களது அடிவருடித்தனத்தையும் ஊக்கப் படுத்துவது என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக, ஒரு செயல் எப்படி செய்யப்படுகிறது என்பதற்கு மாறாக, யார் செய்தார் என்று கவனிக்கப்பட்டு அந்த அடிப்படையில் முடிவெடுக்கப்படும். அதேபோல, ஒரு ஆலோசனை எப்படிப்பட்டது என்பதற்கு மாறாக அதனை யார் வழங்கினார்கள் என்பது முன்னிறுத்தப்படும்.

நிர்வாகத் தலைவரை சுற்றி ஒரு திரை உருவாகும். அதனை தாண்டி நுழைவது என்பது எளிதாக இருக்காது. அங்கு குறைந்தபட்ச தகுதியே துதிபாடுதல் என்ற அவல நிலை ஏற்படும். தவிரவும் அந்த தலைவர்களுக்கு சரியான, மெய்யான செய்திகள்கூட சென்று சேராது.

அதற்கு மாறாக, அவர் விரும்பும் அல்லது மகிழும் செய்திகள் மட்டுமே சென்று சேரும் நிலை தோன்றும். அத்தகைய நிலை அவர்களை தவறான முடிவுகள் எடுக்க வைக்கும் (நெருக்கடி நிலையின்போது அன்றைய பிரதமரை, அவரை மகிழச் செய்யும் செய்திகள் மட்டுமே சென்றடைந்தன. ஏனைய செய்திகள் தவிர்க்கப்பட்டன என சொல்லப்பட்டது).

இந்தத் தலைவர்களது போக்கில் நமது காரியங்கள் எதுவும் தவறாக அமையாது. நாம் சொல்லுவது செய்வது எல்லாமே சரியானவை என்ற ஒரு எண்ணம் கட்டிப் போட்டுவிடும். மேலும், இவர்களது நிறுவனத்தில் திறமையைவிட, அடிவருடித்தனம் முக்கியத் தகுதியாக கருதப்படும். முடிவில் இது நிறுவனத்தை சரிவுக்கு இட்டுச் செல்லும்.

இத்தகைய முகஸ்துதி செய்வோர், ஆமாம்சாமிகள், மத ஸ்தாபனங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், ஏன் நம்மை சுற்றியுள்ள குடும்பங்களில்கூட இருப்பதைக் காணலாம்.

பெரு நிறுவனங்கள், ஆமாம்சாமிகள் மற்றும் முகஸ்துதி செய்வோர் ஏற்படுத்தும் பிரச்னைகளை தவிர்க்கவும் - ஒருவேளை அத்தகைய களை வளர்ந்தால், களையெடுக்கவும் வழி வகை செய்யும்போது, அரசியலிலோ பெரும்பாலான கட்சிகள், முனைந்து இவற்றை ஊக்கு

விப்பதை நாம் வருத்தத்தோடு காண நேருகிறது.

அங்கு புகழ்ந்துரைத்தல், துதிபாடுதல் முக்கியமாகி, துதி பாடாதவர்கள் தலைமையின் நல்லெண்ணத்தை பெற முடியாத நிலையினை காணலாம். பல கட்சிகளில் துதிபாடிகள், அடிவருடிகள் மட்டுமே பட்டம், பதவி, சலுகைகள் பெறுவார்கள்.

இந்த ஆமாம்சாமிகளும் துதிபாடிகளும் தாமே தம்மை தாழ்த்திக் கொள்ளுபவர்கள். சிறு பலன்களுக்காக, தங்களது சுய கெளரவத்தை இழப்பவர்கள். இத்தகைய துதிபாடல்களுக்கு, இவர்கள் விரும்பிய பலன் கிடைக்கும்போது அதுவே இவர்களது பழக்கமாக மாறுகிறது. சில கட்சிகளில் தலைமை இதனை ஊக்குவிக்கும்போது இது கலாசாரமாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. தனிமனித வழிபாடு முழுமை பெறுகிறது.

இத்தகையோர் நிறைந்திருக்கும் கட்சிகளில், தவறுகளை, குற்றம் குறைகளை சுட்டிக் காட்டுவது என்பது அவர்களது தலைமையை குறை கூறுவதாக கருதப்படும். தலைவர்கள் புகழுக்கும், வழிபாட்டுக்கும் மயங்கினால், சில காலம் கழித்து அவர்கள் சுயநலமிகளுக்கு மட்டுமே தலைவராக இருக்க முடியும். இதன் காரணமாக, அவர்களது முடிவுகள், செயல்கள் பெரும்பாலும் தவறாகவே அமையும்.

இது குறித்து, வெற்றியை இழந்த அரசியல் கட்சியினர் அதிகம் சிந்திக்க வேண்டும். தோல்விக்கான காரணங்களை கண்டறியாது, அந்த சூழலில்கூட தலைமையின் மனத்தை குளிர்விக்க துதிபாடுவோர், உண்மையில் மாற்றார்களைவிட அதிக தீங்கு விளைவிப்பவர்கள்.

ஆம், ஆபத்து நிறைந்தவர்கள் ஆமாம்சாமிகளும் துதிபாடிகளும்.

இந்த இடத்தில், டாக்டர் அம்பேத்கர், அரசியல்சட்ட நிர்ணய சபையில் பேசியதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்:

"இந்திய அரசியலில் தனிமனித வழிபாடு என்பது உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இருக்கிறது. சமயத் துறையில் பக்தி என்பது, பக்தர்களின் உய்வுக்கு காரணமாக அமையக்கூடும். ஆனால் அரசியலில் பக்தி என்பது, சரிவுக்கும் சர்வாதிகாரத்துக்கும் வழி வகுக்கும்' என்றார்.

அவரது வார்த்தைகள் இன்றைக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்குப் பொருந்துவது பெரும் வியப்பளிக்கிறது!



கட்டுரையாளர்:

பொறியாளர் (ஓய்வு).

இரா. கதிரவன்

Wednesday, August 31, 2016

MCI's unique 'ID'ea to curb faculty duplication


NEW INDIAN EXPRESS 

COIMBATORE: In a bid to prevent doctors from appearing as faculty in multiple medical institutions, the Medical Council of India (MCI) has decided to assign unique IDs for doctors across the country. The move is part of the MCI’s e-governance initiative.

The council has written to the deans of medical colleges across the country in this regard.

While unique IDs will be provided to all doctors, its primary use is to prevent doctors appearing as faculty in multiple medical colleges, sometimes in different states, to meet the council mandate on the number of faculty.

“This will help rein in duplication of faculty members. Currently, doctors register themselves under their respective State Medical Councils. Their registration number would be accompanied by a State code. If a doctor decides to permanently move to another State, they would have to remove their name from the existing list and register themselves with the medical council of the state to which they are relocating,” said Edwin Joe, dean of the Coimbatore Medical College Hospital.

Besides, the MCI has also decided to monitor the attendance of faculty members of medical colleges across the country through its e-governance initiative.

The menace of multiple affiliations of faculty members is not confined to MCI alone. Recently, the All India Council for Technical Education (AICTE) had found out that more than 50,000 duplicate faculty were enlisted with it.

Following this, it had allotted unique ID numbers to nearly three lakh faculty across the country so that engineering colleges couldn’t ‘share’ faculty members to meet official norms.

Unique IDs prepared based on Aadhaar card details of faculty members were used to monitor their progress.

The council will also roll out an online platform that offers application tracking feature and a repository of certificates, to reduce the cost incurred by applicants to avail the services by offering e-payment options and reducing the need to travel.

The MCI’s e-governance initiative would also provide for a unified database and improved grievance redressal system, work flow-based processing as well as enhanced and user-friendly document management.

காலையில் தூய்மைப் பணி; மாலையில் கலைப் பணி- தவில் இசையில் அசத்தும் துப்புரவுத் தொழிலாளர்




ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தவர்கள் அத்துறைகளில் பிரகாசிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலர் விரும்பிய துறை கிடைக்காவிட்டாலும் கிடைத்த பணியை ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

அப்படி ஒரு அற்புதமான கலைஞர்தான் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் இளங்கோவன் (45). மதுரை வடபழஞ்சி யைச் சேர்ந்த இவர் சிறந்த தவில் வித்வானாகவும் இருக்கிறார். காலை நேரங்களில் மதுரை வீதி களில் குவியும் குப்பை, தேங்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தும் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் இளங்கோவன், மாலையில் நெற்றி யில் சந்தனப் பொட்டு, பட்டு வேட்டி, சட்டை சகிதமாக தவில் வித்வானாக மாறிவிடுகிறார். கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் இவரது தவில் வாசிப்புக்கு ரசிகர்கள் அதிகம்.

விடுமுறை நாட்களில் மும்பை, கேரளம், திருச்செந்தூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடை பெறும் இசைக் கச்சேரிகள், திருமணம், கோயில் விழாக்களுக்கு இவர் சென்று வருகிறார். தவில் வாசிப்பில் ஒரு துப்புரவுத் தொழிலாளி சாதித்து வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து இளங்கோவன் கூறியது: எனது தந்தையும், அவரது தந்தையும தவில் வித்வான்தான். நான் 4-வது தலைமுறையாக தவில் வாசிக்கிறேன். என்னைப்போல எனது தந்தையும் துப்புரவுத் தொழி லாளியாக இருந்தே காலமாகி விட்டார். என்னுடன் பிறந்த தம்பி கள் இருவரும் அப்போது சிறியவர் கள். குடும்ப பாரம் காரணமாக எனது தவில் வித்வான் ஆசையை மூட்டை கட்டிவிட்டு குடும்ப கஷ்டத்துக்காக வும், அப்பா இறந்ததால் அரசு வேலை கைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவும் வாரிசு அடிப்படையில் துப்புரவு வேலையில் சேர்ந்தேன்.

தவில் வித்வானாக ஆசைப்பட்ட என்னால் ஆரம்ப காலத்தில் துப்புரவுப் பணியில் முழு ஈடுபாட்டு டன் பணிபுரிய முடியவில்லை. தவில் வாசிப்பதையும் விட முடிய வில்லை. இதனால், மன அமைதிக் காக மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தவில் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. துப்புரவு பணியிலும் மரியாதை, பிடிப்பு ஏற்படத் தொடங்கியது. தற்போது வேலை நாட்களில் வேலைக்கு சரியாக போயிடுவேன். விடுமுறை நாட்களில் கச்சேரிக்கு செல்கிறேன்.

ஒருமுறை சென்றால் 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். துப்புரவு வேலைக்கு செல்கிறபோது தவில் வித்வான் என்பதை மறந்துவிடுவேன்.

அந்த வேலைக்கு தகுந்தாற்போல் செல்வேன். கச்சேரிகளுக்கு செல்லும்போது அதற்கு தகுந்தாற்போல் மாறி விடுவேன் என்றார்.

கூடுதல் பொறுப்பு இருக்கிறது

இளங்கோவன் மேலும் கூறும்போது, "நான் தவில் வித்வான் என்பது ஆரம்பத்தில் என்னுடன் பணிபுரிகிறவர்களுக்கு தெரியாது. ஒருமுறை என்னுடைய துப்புரவு ஆய்வாளர், எனது தவில் கச்சேரியை உள்ளூர் கேபிள் டிவியில் பார்த்துள்ளார். சக ஊழியர்களிடம் என்னைப் பற்றி விசாரித்ததாக கேள்விப்பட்டேன். அவர் திட்டுவாரோ என்ற பயத்துடன் மறுநாள் வேலைக்குச் சென்றேன். ஆனால், அவரோ என்னைப் பார்த்து பிரமித்து, உனக்குள்ளே இவ்வளவு திறமையா, எங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாயே என உரிமையோடு கண்டித்தார். சக தொழிலாளர்கள் முன்னிலையில் என்னை அழைத்துப் பாராட்டினார்.

அன்று முதல் துப்புரவு தொழில் மீது கூடுதல் மதிப்பும், பொறுப்பும் ஏற்படத் தொடங்கியது. இந்த தவில் வாசிப்பு தொழிலில் 6 மாதம் வேலை கிடைக்கும், மற்ற 6 மாதங்கள் சும்மா இருக்க வேண்டும். எனக்கு அரசு வேலை இருப்பதால் பிரச்சினை இல்லை. மற்ற கலைஞர்கள் நிலையோ பரிதாபம்.

குடும்ப கஷ்டத்துக்காக மோதிரம், சங்கிலி, தோடு, தவில், நாதஸ்வரம் உள்ளிட்டவற்றை அடகு வைப்பார்கள். மீண்டும் வருமானம் வந்ததும் திருப்புவார்கள். மனைவி, குழந்தை என நான் ஒரு குறுகிய குடும்ப வட்டத்துக்குள் இருப்பதால் என்னால் துப்புரவு வேலையை உதறிவிட்டு முழு நேரமும் தவில் வாசிப்பில் இறங்க தயக்கமாக உள்ளது" என்றார்.

நாயைக் காயப்படுத்திய மாணவர்களுக்கு லட்சங்களில் அபராதம்!

vikatan.com

சென்னை: மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம்,நான்காவது மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த அனைவரும் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவிட்டு இருந்தனர். அதனையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் நாயைத் தூக்கி எறிந்து அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய தண்டனைக் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி, விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை குன்றத்தூர் போலீசில் புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர்கள் யார்? சம்பவம் நடந்த இடம் எது? என்பது குறித்து உடனடியாக விசாரணை செய்தனர்.

அதில்,மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன், என்றும், அந்தக்காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தவர் அவரின் நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இருவரும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வருபவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மருத்துவ மாணவர்களைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர்.பின்னர் மருத்துவ மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் பெற்றனர். இதற்கிடையே அவர்கள் படித்த கல்லூரியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வீழ்த்தியது... கனிமவள கணக்கு! விசுவாசத்தால் பலிகடா ஆன ஐ.ஏ.எஸ்.!


vikatan.com

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் ‘டிட்கோ’ தலைவர் - நிர்வாக இயக்குநருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோரின் திடீர் சஸ்பெண்ட் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்த இவர்களின் சஸ்பெண்ட் குறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, பிரமிப்பாக அடுக்குகிறார்கள். “இரண்டு ஐ.ஏ.எஸ்-கள் சஸ்பெண்ட் என்பதோடு நின்றுபோகிற விஷயமாக இது தெரியவில்லை. அடுத்தடுத்து சில அதிரடி நடவடிக்கைகளும் இனி இருக்கலாம்” என்றனர்.

“அரசியல் சிக்கலில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் கனிமவளங்கள் குறித்த ‘முக்கிய’ ஆவணங்களை அரசின் விஜிலென்ஸ் விங் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியது. சுரங்கம் மற்றும் கனிமவளங்கள் துறை ஆணையரான அதுல் ஆனந்திடம், அதே விவரங்கள், ஆவணங்கள் குறித்து கடந்த ஒரு மாதகாலமாக விவரம் கேட்டு அரசு நெருக்கியும் அவரிடமிருந்து இதுபற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதுல் ஆனந்த், அரசுக்கு அளித்த ரிப்ளையைவைத்து அந்தத் தொழிலதிபரின் மீது, சிறு சண்டை வழக்கைக்கூடப் பதிய முடியாது. அவ்வளவு ‘வீக்’கான விவரங்கள்தான் அதுல் ஆனந்திடமிருந்து வந்திருந்தது.

அவரிடம் இதுகுறித்து இறுதியாக, (திங்கட்கிழமை 29.8.2016 - மாலை ) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், நேரில் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார். அப்போதும், போதிய விவரங்கள் அதுல் ஆனந்திடம் இல்லை. இதுகுறித்து முதல்வருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதுல் ஆனந்த் கொடுக்காத தகவல்களைவிடக் கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் ஆளும் கட்சியின் சமீபத்திய எதிரியான சசிகலா புஷ்பா எம்.பி-யிடம் இருப்பதாக ஒரு தகவல் வரவே, அதிகார மையம் சூடாகிவிட்டது. பல ஆண்டுகளாகவே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தவரிடம் இருக்க வேண்டிய விரல்நுனி விவரங்கள், இப்படி இடம் மாறி இருந்தது.

பிரபல கனிம தொழிலதிபரிடம் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலர் தஞ்சம் புகுந்துள்ளதாக வெளியான தகவல்களும் இதனுடன் சேர்ந்துகொள்ள, அது ஆட்சி மையத்தின் கோபத்தை பன்மடங்கு எகிறவைத்தது.
இன்னொரு புறம், தென்மாவட்ட நாடார் இன மக்களைத் தன் பக்கம் இழுப்பதுபோல் சசிகலா புஷ்பா காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பது, அவர் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்பது என்று துணிச்சலாக வலம் வந்ததும் இந்தக் காரணத்தால்தான் என்றும் தகவல்கள் தீயாய்ப் பரவியது.



அ.தி.மு.க-வைவிட்டு சசிகலா புஷ்பா நீக்கத்தின் பின்னர், நாடார் சமூக மக்கள் அ.தி.மு.க மீது மாற்றுக் கருத்தைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதால்தான் அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஆன கையோடு, அதே தென் மாவட்ட நாடார் இனத்தைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனை மந்திரி பதவிக்குக் கொண்டு வரவைத்ததும்” என்கின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்த ஞானதேசிகன், கூடுதல் தலைமைச் செயலாளராகி, அதன்பின் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தவர். தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் பணி ஓய்வுபெற்று, அரசு ஆலோசகரானதும் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர் மோகன்வர்கீஸ் சுங்கத். அவர் பொறுப்புக்கு வந்து சரியாக 9 மாதங்கள்கூட ஆகாத நிலையில், மின்வாரியத் தலைவராக பொறுப்பில் இருந்த பி.எஸ்.ஞானதேசிகனை அ.தி.மு.க அரசு தலைமைச் செயலாளர் பதவியில் அமரவைத்தது.

கடந்த ஜூன் 8-ம் தேதி திடீரென ஞானதேசிகன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக சேர்மனாக போஸ்டிங் செய்யப்பட்டார். முதல்வரின் செயலாளராக அப்போது இருந்த ராம் மோகன ராவ், தலைமைச் செயலாளராகக் கொண்டு வரப்பட்டார். அதே ராம் மோகன ராவ் ஆணைப்படி பி.எஸ்.ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ‘அதுல் ஆனந்த், ஞானதேசிகன் ஒன்றேபோல் சஸ்பெண்ட் ஆனதற்கு என்ன காரணம்?’

அரசு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஞானதேசிகன், தலைமைச் செயலாளர் என்ற உச்சத்தில் இருந்தபோது அவர் சொல்வதைத் தட்டாமல் செய்யும் அன்புக்குரியவராக இருந்தவர் அதுல் ஆனந்த். அதனால்தான் அவரிடம் சில, பல விஷயங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டன. குறிப்பாக கனிமவளம் சார்ந்த விஷயங்கள்... கனிம தொழில் சார்ந்த பிரபலம் குறித்தும் அப்போது அவரிடம் கேட்கப்பட்டது. எதற்கும் அதுல் ஆனந்த் அசைந்து கொடுக்கவில்லை. முன்னதாக ஞானதேசிகனிடம், சில விஷயங்களை முக்கியமான நபர்கள் மூலம், அதிகாரமையம் கேட்டு வாங்கிவிட்ட நிலையில், அதுல் ஆனந்த், அதில் கால்பங்கு அளவுக்குக்கூடச் சொல்லாமல் அநியாயத்துக்கு விசுவாசத்தைக் காட்டிவிட்டார். அவர் தரப்பில் இருந்து சிறிதளவுகூட விஷயம் வரவில்லை. அதன் விளைவே இந்த சஸ்பெண்ட்... இது முடிவல்ல, தொடக்கம்தான்” என்று அதிரவைக்கின்றனர்.

அரசின் தரப்பில் இதுவரையில் சஸ்பெண்டுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஓர் ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவர் மீது, அடுத்த ஆட்சியாளர்கள்தான் வழக்குப் பதிவர். சஸ்பெண்ட் செய்யும் அளவுக்குப் போவர்... ஆனால், முதல் முறையாக அதே ஆட்சியாளர்களால், அதே தலைமைச் செயலாளர் (மாஜி) காலி செய்யப்பட்டிருக்கிறார்

அறிவியல் அறிவோம்: ஒரே மூச்சில் 400 கி.மீ. தூரம்!


பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது.

சாப்பிடாமல் கொள்ளாமல் எப்படி இவ்வளவு தூரம் பறக்கிறது என்கிறீர்களா? அது எங்கே பறக்கிறது? காற்றில் மிதக்கிறது! பெரும்பாலும் இறகை அசைப்பதே இல்லை. அந்த விஷயத்தில் இவர் நம்மூர் பருந்துக்கெல்லாம் அண்ணன்.

மடகாஸ்கர் பகுதியில் வாழும் கப்பல் பறவைகள் சிலவற்றைப் பிடித்து, அதில் உணர்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள் வெய்மர்ஸ்க்ரிச் தலைமையிலான ஆய்வாளர்கள். இப்பறவை எப்படி இரை எடுக்கிறது, எவ்வளவு வேகத்தில் பறக்கிறது, எத்தனை முறை இறகை அசைக்கிறது, எவ்வளவு தூரம் செல்கிறது போன்ற விஷயங்கள் மட்டுமின்றி, இதயத்துடிப்பு, இறக்கை அசைப்பு உள்ளிட்டவற்றையும் நுட்பமாக ஆராய்ந்தார்கள்.

வானில் சுமார் 400 முதல் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள, மிகமிக அடர்த்தியான மேகக் கூட்டத்துக்குப் பெயர்தான் ‘குமுலஸ்’. விமான ஓட்டிகளுக்கே சவால் தருபவை. பார்ப்பதற்குப் பஞ்சு போலத் தெரிந்தாலும் இந்த வகை மேகத்துக்குள் காற்று மேல் நோக்கிச் சென்றபடி அமளிதுமளியாக இருக்கும். இதற்குள் விமானம் சென்றுவிட்டால், விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஜிவ்வென்று மேல் நோக்கிச் செல்லும். அடுத்த நொடியே திடுமெனக் கீழே இறங்கும். நான்குவழிச் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனம், திடீரென மாட்டுவண்டிப் பாதைக்கு மாறியது போலக் குலுங்கும். இதனால் பொதுவாக ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், விமானத்தில் பயணம் செய்யும் பாதிப் பேருக்கு வாந்தி மயக்கம்கூட ஏற்படும். பல ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தையே அதிர வைக்கிற இந்த மேகத்துக்குள் புகுந்து நம்மாள் சடுகுடு ஆடுகிறான்.

மேகத்துக்குள் புகுந்து, அங்கே வீசுகிற மேல் நோக்கிய காற்றின் உதவியால் காகிதம் போல மேலெழுந்து செல்கிறது கப்பல் பறவை. பிறகு, கிளைடர் போல லாகவமாக காற்றில் மிதந்தபடி கீழ்நோக்கிவரும். நிலத்துக்கு அருகே வந்த பிறகுதான் சிறகை அசைத்துப் பறக்கும். ஆக, உயரே செல்லவும் நெடுந்தூரம் செல்லவும் எந்தவித ஆற்றலையும் பயன்படுத்தாமல், ஆற்றலைச் சிக்கனப்படுத்துகிறது இந்தப் பறவை.

அதெல்லாம் இருக்கட்டும்… சோறு தண்ணி இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும் என்று நுட்பமாக ஆராய்ந்தார்கள். அப்போது, கடலுக்கு மேலே தாழ்வாகப் பறந்தபடி லாகவமாக மீனைப் பிடித்து உண்பது தெரியவந்தது. வழியில் கடற்பாறை கிடைத்தால் ஓய்வெடுக்கவும் செய்கின்றன. வழியில் உணவோ, ஓய்விடமோ கிடைக்காவிட்டாலும்கூட இவை கவலைப்படுவதில்லை. இருந்தாலும், கப்பல் பறவை எப்படித் தூங்குகிறது என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

உத்தரப் பிரதேச அமைச்சர்களின் சமோசா, தேநீருக்கான செலவு ரூ.9 கோடி

Return to frontpage

உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் சமோசா, தேநீர் மற்றும் இதர சிற்றுண்டிக்கு ரூ.8.78 கோடி செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களில் தேநீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறப்படுவது உண்டு. இதில் இதுவரை எந்த மாநில அரசும் செலவிடாத அளவில் உ.பி. அமைச்சர்களின் செலவுப் பட்டியல் உள்ளது. இம் மாநிலத்தின் சமூகநலத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சரான அருண்குமார் கோரி, தேநீர், சமோசா மற்றும் குலாப்ஜாமூனுக்காக அதிகபட்சமாக ரூ.22,93,800 செல விட்டுள்ளார். இவரை அடுத்து தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் கைலாஷ் சவுரசியா ரூ.22,85,900 செலவிட்டுள்ளார். இந்தப் பட்டிய லின் மூன்றாவது இடம் பெற்றிருப் பவர் தனது கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மூத்த அமைச்சரான ஆசம்கான். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான இவர் தேநீர், சமோசாவுக்காக ரூ.22,86,620 செலவு செய்துள்ளார். இவ்வாறு சிற்றுண்டிக்காக பல அமைச்சர்கள் ரூ.21 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம் கரண் ஆர்டா, நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜக்தீஷ் சோன்கர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

உ.பி. சட்டப்பேரவையில் கடந்த வாரம் இது தொடர்பாக பாரதிய ஜனதா உறுப்பினர் சுரேஷ் குமார் கண்ணா எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் எழுத்துமூலம் பதில் அளித்தார்.

அப்போது அகிலேஷ், “கடந்த 2012, மார்ச் 15-ம் தேதி எனது அரசு பதவியேற்றதில் இருந்து 2016, மார்ச் 15 வரை 4 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த 4 ஆண்டு களில் அமைச்சகங்களின் தேநீர், சமோசா மற்றும் இதர சிற்றுண்டி செலவு ரூ.8.78 கோடி” என்றார்.

உபி அரசின் நிர்வாக விதிகளின்படி ஓர் அமைச்சர் நாள் ஒன்றுக்கு மாநிலத்துக்கு உள்ளே ரூ.2500 வரையும் மாநிலத்துக்கு வெளியே ரூ.3000 வரையும் தனது பணிக்காலத்தில் செலவிடலாம் எனவும் தனது பதிலில் அகிலேஷ் சுட்டிக்காட்டினார்.

இதில், கடந்த 2015, அக்டோப ரில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சிவகுமார் பேரியா ரூ.21,93,900 செலவு செய்திருப்ப தாகவும் அகிலேஷ் தெரிவித்தார்.

அமைச்சர்களின் சிற்றுண்டி செலவில் குறைந்தபட்ச தொகை யாக ரூ.72,500 காட்டப்பட்டுள்ளது. இத் தொகையை மகளிர் மேம் பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சராக ஓராண்டு பதவி வகித்த சாதாப் பாத்திமா செல விட்டுள்ளார்.

இது குறித்து ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த செலவுகள் பார்ப்பதற்கு மிகவும் அதிகமாகத் தெரியலாம், ஆனால் இவை அனைத்தும் அமைச்சர்கள் தங்களுக்காக மட்டுமே செலவிட்டது அல்ல. அமைச்சர்கள் கூட்டும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காகவும் செலவிடப்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.

TNPSC GROUP IV

டிஎன்பிஎஸ்சி | குரூப்- IV | மாதிரி வினா- விடை 1: 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?


அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு. சமூக அந்தஸ்து, பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம் போன்ற காரணங்கள் இளைஞர்களை அரசு வேலை நோக்கி ஈர்க்கின்றன. தமிழக அரசுப் பணிக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் வரித்தண்டலர் ஆகிய பல்வேறு விதமான பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் நவம்பர் 6-ல் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30, பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்-2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும் கூட பெரும்பாலும் பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் குரூப்-4 தேர் வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இவ்வாண்டு 12 லட்சம் பேர்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் விண்ணப் பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்பேரில் சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் திருத்தியமைக்கப்பட இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.

பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். பெரும்பாலான விண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வுசெய்கிறார்கள்.

போட்டித் தேர்வின் உத்திகள்

12 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதில் 12 லட்சம் பேருமே உண்மையான போட்டியாளர்களாக இருக்க முடியாது. அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்ப வர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமை யான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தரத்தில்தான் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், வெற்றிக்கான மதிப்பெண்ணை தரும் கேள்விகள் சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் என்பதால் அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளி பாடங்களை படிப்பது கூடுதல் சிறப்பு.

நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இனிவரும் காலங்களில் துறைசார் வல்லுநர்கள் விளக்குவார்கள். அவர் களின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பில் ஈடுபட்டாலே போதும். எனினும், தயாரிப் பின் தொடக்கம் என்பது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை படிப் பதில் இருந்து தொடங்குவதே நலம்.

மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் தலங்கள், முக்கிய இடங்கள் என தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்ப தால் தமிழகம் குறித்த பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியம். கணிதம் மற்றும் திறனறிவு பகுதியில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் வெளியாகும் கணித மாதிரி வினா - விடைகளை தொடர்ச்சியாக முயன்று பார்ப்பது நேர மேலாண்மைக்கு உதவும்.

வெற்றிக் கொடி கட்டலாம்

‘வெற்றிக்கொடி’ பகுதி மூலம் உயர் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக எண்ணற்ற தகவல்களை மாணவ சமுதாயத்துக்கு வாரி வழங்கிக் கொண் டிருக்கும் ‘தி இந்து’ நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு மாதிரி வினா - விடைகளை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மாதிரி வினா - விடைகளுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கு இளைஞர்களிடம் இருந்து ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினா-விடைகளையும், அரிய ஆலோ சனைகளையும் வழங்க இருக்கிறோம்.

வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் இப்பகுதி வெளியாகும். அனுபவம் பெற்ற நிபுணர் கள், துறை வல்லுநர்கள் வினா-விடை களை தொகுத்து வழங்க உள்ளனர். வெறும் வினா - விடைகள் மட்டுமல்லாமல் தேர்வுக்கு தயாரா வோருக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய தயாரிப்பு உத்திகளும், விளக் கங்களும் வழங்கப்பட உள்ளன.

கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் வகுப்பறைக்குள் புகுந்து மாணவி படுகொலை: முன்னாள் மாணவர் கைது



கரூர் அருகே உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் வகுப்பறைக் குள் புகுந்து மாணவியை கட்டை யால் அடித்துக் கொன்ற முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி(19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி அருகே உள்ள வெங்க ளூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(21). இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த இவர், சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப் படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூ ரிக்கு வந்த உதயகுமார், வகுப் பறையில் இருந்த சோனாலியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அங்கு கிடந்த கட்டையால் சோனாலியின் தலை யில் உதயகுமார் தாக்கியுள்ளார். தடுக்க வந்த சக மாணவர்களையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அங்கு இருந்தவர் கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்த மாணவிகள்


ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்து மண்டியிடச் செய்த மாணவிகள்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத் தில் ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்து மண்டியிடச் செய்தனர்.

புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம் மாலை வகுப்பு கள் முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் வினோத் குமார் என்பவர் மாணவிகளைப் பார்த்து அநாகரிகமாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சக மாணவிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத் துக்குள் சில மாணவிகள் பிரம்பு கம்புகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியரை அடித்து உதைத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச் செய்தனர். உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

குடிப்பதற்கும், சமையலுக்கும் மழைநீர் மட்டுமே உபயோகம்: 28 ஆண்டுகளாக பின்பற்றும் முதியவர்

Return to frontpage

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் தனது குடும்பத் தேவைகளுக்காக குடிப் பதற்கும், சமைப்பதற்கும் மழை நீரை மட்டுமே சேகரித்து 28 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.

மழை பொழியும் காலங்களில் குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் மழைநீரை சேகரித்து வைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மழையில்லாத காலங்களிலும் நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக கொண்டு வரப்பட்ட அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் தற்போது பெரும்பாலும் வீடுகள், அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லை. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை போன்ற காரணங்களாலும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதனால் மழைக்காலம் முடிந்த சில நாட்களிலேயே, மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. குடிப்பதற்குகூட தண்ணீர் கிடைக் காததால் அதிருப்தி அடைந்த மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த விமானப் படை மற்றும் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சேகர் (70) என்பவர், தனது வீட்டிலேயே மழைநீரைச் சேகரித்து கடந்த 28 ஆண்டுகளாக குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். மாடியிலிருந்து விழும் மழைநீரைச் சேகரித்து வைப்பதற்காக பிரத்யேகமாக தொட்டி ஒன்றை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சேகர் கூறியதாவது: வங்கியில் பணியாற்றியபோது ஒருநாள் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், லாரியில் கொண்டு வரப்பட்ட தண்ணீரைப் பிடிப்பதற்காக மக்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, வீட்டிலேயே மழைநீரை சேகரிக்க முடிவு செய் தேன். அதன்படி, மாடியிலிருந்து விழும் மழைநீரை பாத்திரங்கள் மற்றும் தொட்டியில் சேகரித்தோம். முதலில் வரும் மழை தண்ணீரில் தூசி கலந்திருக்கும். எனவே, முதல் 10 நிமிடங்களுக்கு வரும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு கிடைக்கும் தண் ணீரை மட்டுமே சேகரிக்க வேண்டும்.



பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மழைநீர்.

இதற்காக தனியாகத் தொட்டி கட்டி உள்ளோம். மாடியிலிருந்து வரும் மழைநீர் குழாய் வழியாக நேரடியாக தொட்டிக்குச் சென்றுவிடும். அதேபோல, மழைக்காலங்களில் பிளாஸ்டிக் தொட்டி, பாத்திரங்களில் சேகரித்தோம். சுத்தமான துணியால் தண்ணீர் சேகரித்துள்ள பாத்திரங்களை மூடிவிட வேண்டும். இந்தத் தண் ணீரை கொதிக்க வைத்தே குடித்து வருகிறோம். சமையலுக்கும் இந்த தண்ணீரையே பயன்படுத்து கிறோம். வெளியூர் சென்றாலும், பாட்டிலில் தண்ணீரைக் கொண்டு செல்வேன். நாளொன்றுக்கு ஒரு குடம் தண்ணீர் செலவாகிறது. இதுவரை, ஒருமுறை கூட தண் ணீருக்குப் பற்றாக்குறை வந்தது கிடையாது. மினரல் வாட்டரைவிட மழை நீர் தூய்மையாக இருப்பதால் வெளியிலும் விலைக்கு வாங்கியது கிடையாது.

எப்படியானாலும் தண்ணீர் தீர்வதற்குள் மழை பெய்துவிடும். வெளியூர் செல்லாத நாட்களில் எங்கிருந்தாலும் மழை பெய்தால் வீட்டுக்கு வந்து விடுவேன். பாத்திரம் கழுவிய தண்ணீரைத் தோட்டத்தில் வளர்க்கும் துளசி, செம்பருத்தி, தூதுவளை, தென்னை, வாழை உள்ளிட்ட தாவரங்களுக்கு ஊற்றுகிறோம். சொந்த வீடு வைத்துள்ள ஒவ்வொரு வரும் மழையை நம்பி நமக்கு நாமே என இத் திட்டத்தைச் செயல்படுத்தினால் குடிநீர் பிரச்சினையை சுலபமாக தீர்த்து விடலாம் என்றார்.

சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்

Return to frontpage

நிறுவனம் டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான்.

கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறு வன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது.

தொடக்கத்தில் இந்த கார் பயணம் முற்றிலும் இலவசமாகும். முதலில் 6 கார்களை இதுபோல் டிரைவர் இன்றி இயக்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 12 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை வழங்குவதே இந்நிறுவனத்தின் இலக்காகும். தொடக்கத்தில் இந்த வாடகைக் கார்கள் 6.5 சதுர கி.மீ. தூர அளவிற்குள் இயக்கப்படும். இப்பகுதி ஒன் நார்த் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள வாடிக்கையாளர்கள் நு டோனோமி செயலியைப் பயன்படுத்தினால் அவர்கள் இருப்பிடத் துக்கு கார் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். தொடக்க நாளன்றே 12 பேர் இந்நிறுவன செயலியைப் பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ரெனால்ட் ஜே, மிட்சுபிஷி ஐ-எம் உள்ளிட்ட கார்கள் மாற்றம் செய்யப்பட்டு இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கார்களில் 6 செட் லிடார் எனப்படும் உணர் கருவி பொறுத்தப்பட்டிருக்கும். இது ரேடார் போன்று செயல்படும். இதுதவிர காரின் மேல் பகுதியில் ஒன்று சுழன்று கொண்டிருக்கும். முன்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இது டிராபிக் சிக்னல் விளக்கின் நிற மாற்றங்களை உணர்ந்து காரை இயக்கும்.

கார் எங்கிருந்து தேவை, எதுவரை பயணம் செய்யப் போகிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்து விட்டால் போதுமானது. இதுபோன்ற டிரைவர் தேவைப்படாத கார்கள் புழக்கத்துக்கு வரும்போது சிங்கப்பூரில் கார்களின் எண்ணிக்கை 9 லட்சத்திலிருந்து 3 லட்சமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டங்கள் முடிந்துவிட்டன. இனி குறிப்பிட்ட வழித்தடங்களில் இதைச் செயல்படுத்த வேண்டியதுதான் என்று நு டோனோமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்ல் இயாக்னெமா தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ள நு டோனோமி நிறுவனத்தில் சிங்கப்பூர் மற்றும் மாச சூசெட்ஸ் அலுவலகங்களில் மொத்தமே 50 பணியாளர்கள்தான் உள்ளனர். 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறு வனம் தொடக்கத்தில் அமெரிக்க ராணு வத்துக்கு ரோபோட்டிக் வாகனங் களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. கடந்த ஓராண் டாகத்தான் டிரைவர் இல்லாத வாகன செயல்பாட்டில் கவனம் செலுத்தியது.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் ஒன் நார்த் எனும் பகுதியில் டிரைவர் இல்லாத வாகனத்தை சோதனை ரீதியில் செயல்படுத்திப் பார்க்க இந்நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இதைச் செயல்படுத்த சிங் கப்பூர் தரைவழிப் போக்குவரத்து ஆணையத்துடன் இந்நிறுவனம் ஒப்பந் தம் செய்து அதை நிறைவேற்றியுள்ளது.

சிங்கப்பூரில் தட்ப வெப்ப நிலை மிகவும் சரியான அளவில் உள் ளது. இங்குள்ள வாகன ஓட்டிகள் சட்ட விதிகளை முறைப்படி பின்பற்றுகின் றனர். இதனால் இங்கு டிரைவர் இல்லா வாகனத்தை செயல்படுத்திப் பார்ப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை என்கிறார் கார்ல்.

ஆட்டோமொபைல் உதிரிபாகங் களை சப்ளை செய்யும் டெல்பி நிறுவன மும் டிரைவர் தேவைப்படாத கார் களை இயக்கிப் பார்க்க சிங்கப்பூர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந் நிறுவன கார்கள் அடுத்த ஆண்டு சிங்கப் பூர் சாலைகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறையும், மனித வள பற்றாக்குறையும் நிலவுகிறது. இவ்விரு பிரச்சினைக்கு டிரைவர் தேவைப்படாத கார்கள் சிறந்த தீர்வாக அமையும் என்று கருதுவதாக சிங்கப்பூர் போக்குவரத்துத் துறையின் நிரந்தர செயலர் பாங் கின் கியோங் தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத கார்கள்தான் எதிர்கால சாலையை ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் என்பதில் சந்தேகமில்லை.

Monday, August 29, 2016

MD course in family medicine in the offing

THE HINDU 

Dr. H.S. Ballal, Pro-Chancellor, Manipal University, Karnataka, on Friday said the Medical Council of India is planning to roll out an MD course in family medicine shortly.

Delivering the 9th Graduation Day address at the Pondicherry Institute of Medical Sciences (PIMS), Dr. Ballal pointed out that while in the past there used to be family physician concept where the family doctor not only was taking care of medical problems but used to be like a senior family member helping the family in other areas like matrimonial and other problems of the family, that trend had disappeared.

It was in this scenario that the MCI was planning to introduce MD in family medicine.

Dr. Ballal called for greater emphasis on prevention of disease which was cheaper with protected water supply, immunisation and clean surroundings. Though a lot of advances were taking place in medical field with newer generation of equipment both for diagnostic and therapeutic purposes, the important thing that we have to recognise is that these facilities should be accessible to the poorest of the poor across the country at a reasonable cost — almost 70 per cent of people live in rural areas and 65 per cent of the population is below poverty line.

Stating that educational institutions “are more sacred than places of worship”, Dr. Ballal felt that sub standard institutions were flourishing only because there was less supply of medical colleges compared to the demand. “If we match the supply and demand, naturally substandard institutions will perish,” he said. There were 426 medical colleges in the country producing more than 50,000 MBBS students but the number of postgraduate seats available especially in clinical subjects was less than a third of the total MBBS graduates, he said.

Some of the States were making rural services compulsory to be eligible for post graduate admission. “The reason why the doctors are not going to rural areas are lack of infrastructure, no supporting staff, no drugs, no equipment and poor facilities regarding accommodation and schools,” Dr. Ballal said.


Higher education should focus on expansion, equity, excellence and employability alongside imparting values and skill development. “If we incorporate all these above mentioned factors we can produce good doctors,” he said.

Dr. Ballal reminded doctors that the medical profession was considered a noble profession. “In the past doctors used to be treated like demi-gods but today our reputation is rapidly going down because of some unethical practices,” he said.

To the young doctors he had a word of advice: “Don’t be mercenaries, money will automatically come with the hard work and dedication to the profession.”

Dr. Renu G Boy Varghese, PIMS Director-Principal, presented a report.

In all, 106 MBBS students graduated and 43 post graduates were awarded their degrees. Six MBBS students received ICMR short term student fellowships while PIMS short term student fellowship was given to nine students.

Dr. Siddhant J Thampi got the Gold Medal for the Best Outgoing Student for 2015. The Aban Memorial Gold Medal for the All Rounder of the Year 2015 was awarded to Dr. Aravind S. and the Dr. Ramachandran A Memorial Best Sports Person for 2015 to Dr. Shrieaswari S.Dr. Ashok Kumar R was declared the Best Intern for 2015 and awarded a Gold Medal. The JT Kuruvila Award for 2015 Best Intern in OBG was awarded to Dr. Divya R.

திங்கட்கிழமையை உற்சாகமாகத் துவக்க உதவும் 4 GIF-கள்..! #MondayMotivation

VIKATA NEWS

இன்று திங்கள் கிழமை. நாம் உச்சபட்ச உற்சாகத்துடன் வேலையை துவங்க வேண்டிய நாள். இந்த நான்கு விஷயங்களை மனதுக்குள் சொல்லிக்கொண்டு பின்னர் வேலையை தொடங்குங்கள்.

1. நான் எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்வேன் :- எந்தவொரு வேலையும் உயர்ந்ததோ, தாழந்ததோ கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதால், நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதை சிறப்பாகச் செய்யும்போது நீங்கள் வாழ்வில் வளர்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைக்கு உங்களை விட இன்னொருவர் உங்களது வேலையை சிறப்பாகச் செய்துவிட முடியாது. அதே சமயம், நீங்கள் இன்னும் சிறப்பாக வேலையைச் செய்யக் கூடியவர். எனவே உங்களது பெஸ்ட்டை நீங்கள் தான் வெளிக் கொணர வேண்டும். nothing is impossible - man

2. எல்லாமே சாத்தியம் :- உங்கள் மீது மட்டுமே வேலைச் சுமை இறக்கி வைக்கப்படுகிறது என நினைக்காதீர்கள். பனிச்சுமை என்பது சில சமயங்களில் தவிர்க்க முடியாது. அதற்காக சோர்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு எந்தவொரு சோதனை வந்தாலும் அதனை சாதனையாக மாற்றும் திறன் இருக்கிறது. உங்களது திறனை உலகுகுக்காட்டும் வாய்ப்பாக இதனை பாருங்கள். எல்லாமே சாத்தியம் என்பது மட்டும் உங்களது மனதில் பதிந்துவிட்டால் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரமே.you are doing a great job very great job - lady

3. முயற்சியை கைவிடாதீர்கள்:- எல்லா ஜாம்பவான்களும் அவரவரது வேலைகளில் பல்வேறு சாவல்களை சந்தித்து தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். நீங்கள் உங்களது வேலையை மிகச்சிறப்பாகச் செய்யும் போது உங்கள் மீது பலர் கல்லெறியலாம். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் சோர்ந்து விடக்கூடாது. உங்களது முயற்சியை நீங்கள் தொடர வேண்டும். ஏனெனில் உங்களுக்காகத் தான் வெற்றி தேவதை மலை உச்சியில் காத்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். don't give up - bike

4. கனவு காணுங்கள் : - அப்துல்கலாம் சொன்னது தான். கொஞ்சம் டெம்பிளேட்டாக இருந்தாலும் இது தான் முக்கியம். கனவு காண்பதை எப்போதும் கைவிடாதீர்கள். டெஸ்லாவுக்கோ, எடிசனுக்கோ மின்சாரம் என்பது சாத்தியம் என தோன்றியிருக்காவிட்டால் இந்நேரம் நமக்கு விளக்கு வெளிச்சமே இருந்திருக்காது. கம்பியில்லா மொபைல் சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இந்நேரம் மொபைலில் நீங்கள் இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்க முடியாது. எனவே அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசியுங்கள். உங்களது கற்பனைச் சிறகுக்கு சுதந்திரம் கொடுங்கள்.உங்கள் கனவு தானாக அதுவே நனவாகாது. நீங்கள் தான் உழைக்க வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அது சாத்தியப்படும். ஏனெனில் நீங்கள் ஒரு வாழும் லெஜெண்ட் அல்லவா.

Posted Date : 11:30 (29/08/2016) 30 ஆண்டுகள் சேதி சொல்லும்,'தகவல் மனிதர்' பழனிச்சாமி!

VIKATAN NEWS

திருச்செங்கோட்டில் இருந்து, ஈரோடு செல்லும் வழியில் இருக்கிறது ஐந்து பனை பேருந்து நிறுத்தம். இங்கு வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகள் இந்த ஊர் மக்களுக்கு மட்டும், ரொம்ப ஸ்பெஷல். காரணம், இந்த தகவல் பலகையில் தினமும் அன்றைய செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள், அரசின் அறிவிப்புகள் என முக்கிய விஷயங்கள் தினமும் இடம் பெறும். இந்த தகவல் பலகையில், கடந்த 30 வருடங்களாக இந்த தகவல்களை எழுதி சேவை செய்து வருகிறார் அந்த ஊரின் தகவல் மனிதர் பழனிச்சாமி.
யார் அந்த பழனிச்சாமி என விசாரித்து, அவரைக் காண சென்றோம். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் பழனிச்சாமி. ஆனால் 30 ஆண்டுகளாக ஊர் மக்களுக்காக தகவல் பலகையில் எழுதி வருகிறார். இதனால் ஊர்மக்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் 'தகவல் மனிதர்'. இது குறித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

எத்தனை வருடமாக, நீங்கள் தகவல் பலகை எழுதுகிறீர்கள்?

"நான் சிறுவனாக இருந்தபோது, என் வீட்டில் வறுமை. அதனால் எட்டாம் வகுப்பைக் கூட, முழுமையாக முடிக்காம நின்று விட்டேன். ஆனால் அதற்குப் பிறகும், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்ததால் தினசரி நாளிதழ்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். சமூக ஆர்வமும் எனக்கு அதிகம். அதனால், ஏதாவது செய்ய வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த யோசனை வந்தது. சரியாக 1985-ல் இருந்து தகவல் பலகையில் எழுதி வருகிறேன். இன்னும் எழுதுவேன்".

ஏன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் எழுத நினைத்தீர்கள்?

"பேருந்துக்காக இங்கே நிற்கும் போது, அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். அப்போது அவர்கள் படிக்க வசதியாக இருக்கும் என்றுதான் இங்கே எழுத ஆரம்பித்தேன். பேருந்தில் வருபவர்களும் இதைப் படிக்க முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலருக்கும் உபயோகமாக இருக்கும். அவர்களும் இதனைப் பாராட்டுகிறார்கள். அனைவருக்கும் பயன்படும் விதமாக அரசு வேலைவாய்ப்பு, அரசு அறிவிப்புகள், பொது அறிவு விஷயங்கள் போன்றவற்றை எழுதுகிறேன்".




இதற்காக மாதம் எவ்வளவு செலவு செய்வீர்கள்?

"தினமும் இரண்டு அல்லது மூன்று தினசரிகள் வரை வாங்குவேன். எழுதுவதற்குத் தேவையான மாவும், சாயமும் வாங்கிவந்து நானே எழுதுவேன். பிறகு பள்ளிக்கூட விசேஷம், கண்தான முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக எழுதிக் கொடுப்பேன். ஒரு தட்டி வைக்க சுமார் 50 ரூபாய் செலவாகும். வாரம் 6 தட்டி வைப்பேன். அத்துடன் மாவு, சாயம் என 1,500 ரூபாய் வரை செலவாகும். இதை ஒரு சேவையாக நினைத்து செய்வதால், இந்த செலவும், கஷ்டங்களும் தெரிவதில்லை".

இதைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிறையப் பேர் பாராட்டுவார்கள். ஒரு சிலர் கேலியும் செய்வர். என் பையன் மட்டும் அப்பப்போ என்னை திட்டுவான். அவன் திட்டுவதற்குக் காரணம், எனக்கு சுகர் இருப்பதால் அவ்வப்போது மயக்கம் வரும். அப்போதும் நான் எங்கேயாவது எழுதிக் கொண்டே இருப்பேன். யார் என்ன சொன்னால் என்னங்க? நாம் செய்வதால் மற்றவர்கள் பயனடைகிறார்கள். அது போதுங்க" என்றார் பழனிச்சாமி.

- ச.செந்தமிழ்செல்வன், லோ.பிரபுகுமார்
(மாணவப்பத்திரிகையாளர்கள்)

“ரேஷன் கார்டு அச்சடிக்க பணம் வேண்டும்...” லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்! (வீடியோ ஆதாரம்)

vikatan news

லஞ்சம் வாங்குவதும் குற்றம்.. கொடுப்பதும் குற்றம்...' இந்த வாசகம் எல்லா அலுவலகங்களில் நீக்கமற நிறைந்திருப்பதுபோல, லஞ்சமும் ஊழலும் குடி கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்கள் லஞ்சம் கொடுத்து காரியங்களை விரைவாக முடித்துக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. மக்கள் தற்போது லஞ்சம் கொடுப்பதை அசிங்கமாகப் பார்ப்பதுடன், லஞ்சம் கேட்கும் ஊழியர்களைப் பொது மக்கள் தைரியமாக அம்பலப்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ராமன். உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாததால் திருப்பூரில் டைலராக வேலை பார்க்கும் இவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். ஐந்து வருடங்களில் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு நடந்ததில் ராமனின் செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். ஐந்துமுறை அவரிடன் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர். ஏன் என்று கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ காரணம் சொல்லி உள்ளனர். அதிகாரிகளைப் பொறுத்தவரை ராமன் செய்த தவறு, அவர்கள் கேட்ட லஞ்ச பணத்தைத் தர மறுத்தது. லஞ்சம் தராமல் ரேஷன் கார்டைப் பெற்றுவிடவேண்டும் என ராமன் வைராக்கியத்துடன் இருக்க... ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் தட்டிக்கழிக்கப்பட்டதால் வெறுத்துப்போன ராமன் ஒரு முடிவுக்கு வந்தார்.

அந்த முடிவை ராமனே விவரிக்கிறார், ''லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேச்சம்பள்ளி தாலுக்கா ஆபீஸில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி சிவச்சந்திரன் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்த அவர், 'புது ரேஷன் கார்டுக்கு பிரின்டிங் செலவு இருக்கு, பல கட்டத்தைத் தாண்டி உங்க விண்ணப்பம் போகணும். அதனால செலவு ஆகும்' என்றார். 'ரேஷன் கார்டு வந்த உடன் பணம் தருகிறேன்' என நான் கூறியவுடன், கையெழுத்துப் போட்டு விண்ணப்பத்தை எறிந்தார். இதை அப்படியே பதிவுசெய்து வந்துவிட்டேன். நான் லஞ்சம் தராததால், ஏதாவது காரணத்தைச் சொல்லி விண்ணப்பத்தை ரிஜக்ட் செய்துவிடுவார்கள். 5000 ரூபாய் தந்திருந்தால் ஒரே மாதத்தில் எண்ணால் புது ரேஷன் கார்டைப் பெற்றிருக்க முடியும். ஆனால், நான் அதை விரும்பவில்லை. எங்கள் ஊரில் பலர், பிறந்த குழந்தைக்கு, பிறந்த சான்றிதழைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு தீர்வு வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.

இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி ராஜேந்திரனிடம் பேசினோம். அவர், ''நீங்கள் சொல்லிய பிறகுதான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருகிறது. புது ரேஷன் கார்டுக்காக மக்கள் ஒரு பைசாகூடக் கொடுக்க வேண்டியதில்லை. இதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

Race club case: HC reserves order on suit challenging termination of lease

Race club case: HC reserves order on suit challenging termination of lease  TIMES NEWS NETWORK 25.09.2024  Chennai : Madras high court on Tu...