ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பர், ஆசிரியர்! #HappyTeachersDay
நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள். அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். நம் அனைவருடைய மனத்திலும் ஆசிரியர் என்றால் படம் நடத்தி குழந்தையை மாநிலத்தில் முதல் மாணவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு அது தவிர பல விளக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஆசிரியர் அப்படி இருந்தால் நம் மனம் அவரை ஏற்க மறுக்கிறது. ஏன் என்றால் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நாம் விரட்டப்படுகிறோம். ஆனால் இன்றளவிலும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து வருகின்றனர். அப்படி ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தெரிந்துகொல்லுங்கள்!
கற்பிப்பதில் ஆர்வம்!
இதுதான் முதல், கற்பிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவர் அந்த ஆர்வத்தை தானகவே வெளிப்படுத்துவார். அப்படி ஆர்வம் உள்ளவரை நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த ஆர்வம் இருக்கும் ஒருவர் தன் வகுப்பில் எளிதாக பாடத்தை புரியவைத்துவிடுவார். இந்த ஆர்வம் மிக்க ஆசிரியர் தன் மாணவர்களை மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடவிடாமல் அறிவு என்ற பாதைக்கு அழைத்துச்செல்வார்.
மாணவர்களிடம் அன்பு!
ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களிடத்தில் அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் ஆசிரியரிடத்தில் மாணவர்களும் அன்பு செலுத்தலாம். ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அன்பை உணர்ந்திருப்பீர்கள். இந்த விதமான ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தாலே மாணவர்கள் தனிப் புத்துணர்வு அடைவார்கள். அவர் எடுக்கும் பாடத்திலும் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இதை அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் அது அன்பு தான்.
பாடத்துறையின் மீது காதல்!
தான் கற்பிக்கும் பாடத்துறையின் மீது காதல் கொண்ட ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பார். தான் விரும்பும் பாடத்தை பிறர் விரும்பும் வகையில், ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமையாக இருக்கும். மாணவர்களுக்கும் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படும்.
பள்ளியின் பொருள்!
ஒரு ஆசிரியர் பள்ளி எதற்கானது என்பது அறிந்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவன் வந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளில் 100 மதிப்பெண்களுக்கான பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்று கூறும் இடம் அல்ல. இது மாணவனின் வாழ்க்கையின் ஒரு பொன்னான காலம்தான் பள்ளி படிப்பு. இந்த பருவத்தில் அவன் வளர்ச்சி பெற்று, அவனுடைய அடையாளத்தை அறிந்து அவனுக்கு எது செய்தால் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்து அதனை இலக்காக வைத்து ஓட வேண்டிய பருவம். ஆசிரியர்கள் அந்த மாணவனின் திரமையை கண்டறிய ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவன் திறமை வகுப்பறையில் வெளிப்படலாம் அல்லது விளையாட்டு மைதானத்தில் வெளிப்படலாம். இதை கண்டறிந்து அந்த மாணவனை ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியரின் கடமை.
விருப்பத்திற்கான மாற்றம்!
இது ஒரு சிறந்த ஆசிரியருக்கான ஒரு சிறந்த பன்பு. இந்த பன்பு உடைய ஆசிரியர் சிறப்பின் உச்சியில் உள்ளார் என்றே கூறலாம். ஆசிரியர் எப்போதும் தன் கற்ப்பித்தல் மூலமாக மாணவர்களை மற்றலாம் என்று எண்ணக்கூடாது. மாணவர்களுடன் கலந்துரையாடும்போது மாணவர்களுக்கு ஏற்ப தன்னை மற்றிக்கொள்ளவும் முன்வர வேண்டும். இது ஆசிரியர்களுக்கு ஒரு கடினமான காரியம் அல்ல. அப்படி தன்னை மற்றிக்கொள்ளும் மனம் ஆசிரியருக்கு வந்துவிட்டால் ஆசிரியர் மாணவரிடையே ஒரு சிறந்த உறவு உருவாகும்.
தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!
எத்தனை வருடம் இந்த ஆசிரியர் பணியில் இருந்தாலும் நாம் கற்றது கை மண் அளவே. நாம் கற்க வேண்டியது ஏறாலம் என்பது ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்த ஒன்று. நமக்கு தெரிந்ததுடன் நிருத்தாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த சவால்களுக்கு திறமையுடன் உழைத்து நல்ல தீர்வுகளையும் கண்டறிய வேண்டும்
இது மட்டும் அல்ல.இன்னும் பல உள்ளன. கற்றல் என்பது ஒரு குழு முயற்சி. அங்கு ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களுடன் உரையாடும் போது ஆசிரியர் ஒரு சக மாணவனாக அந்த மாணவனுடன் பேசிப் பழகவேண்டும். பொறுப்பு, கருணை, ஒத்துழைப்பு, படைப்பு,அர்ப்பணிப்பு, உறுதி, முன்மாதிரி, ஈடுபாடு, உத்வேகம், பறந்தமனம் போன்றவையும் ஆசிரியரின் உயரிய பண்புகளே.
மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மாபெரும் சக்தி ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்த தான் இந்த ஆசிரியர் தின விழா. அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
முரளி.சு
மாணாவப் பத்திரிகையாளர்
No comments:
Post a Comment