இனி க்ரூப் சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது! #WhatsAppUpdate
வாட்ஸ்அப் பல பேரின் ஃபேவரைட்டாக மாறுவதற்கு காரணமே, அதன் அப்டேட்கள்தான். பயனாளிகளுக்குத் தேவையான அப்டேட்களை அடிக்கடி வழங்கிவரும் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் எப்படி இருக்கிறது?
வாட்ஸ்அப்பின் க்ரூப் சாட் என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். வந்துகுவியும் உங்களின் நண்பர்களின் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் எனில் பிரச்னை இல்லை. ஆனால் அதுவே உங்களுக்கு எரிச்சல் அளித்தால் க்ரூப்பை ம்யூட் (Mute)செய்து விடுவீர்கள். ஆனால், இனி ம்யூட் செய்தால் கூட, நோட்டிஃபிகேஷன்களில் இருந்து தப்பிக்க முடியாது.
க்ரூப்சாட் வசதிகளை இந்த அப்டேட்டில் கொஞ்சம் மேம்படுத்தியுள்ளது வாட்ஸ்அப். உதாரணமாக நீங்கள் இருக்கும், ஒரு க்ரூப்பில் இருக்கும் 10 பேர், சேர்ந்து 100 தகவல்களைப் பரிமாறிக் கொண்டால், அதில் ஒன்றோ, இரண்டோதான் உங்களுக்கு தொடர்புடையதாக இருக்கும். ஆனால் உங்களுக்கு சம்பந்தமில்லாத செய்திகள் வந்து குவிவதால், அதனைப் படிக்காமலே கடந்து விடுவீர்கள். அல்லது எல்லா செய்திகளையும் படிக்க வேண்டியது வரும். இனிமேல் அந்தப் பிரச்னை இருக்காது. ஃபேஸ்புக்கில் டேக் (Tag) செய்வது போலவே, வாட்ஸ்அப் க்ரூப்பிலும் Tag செய்ய முடியும். குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, நீங்கள் செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து Tag செய்யமுடியும். இதனால் முக்கியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும். இப்படி Tag செய்யப்படும் நபர், க்ரூப்பை மியூட் செய்து வைத்திருந்தாலும் கூட, நோட்டிஃபிகேஷன் காட்டும்.
அதே போல வாட்ஸ்அப் கேமரா கொண்டு செல்ஃபி எடுத்தால், ஃபிளாஷ் செயல்படும். இது வாட்ஸ்அப் கேமராவிற்கு மட்டும்தான். மொபைல் கேமராவிற்கு கிடையாது. அதேபோல, உங்கள் மொபைலில் முன்பக்க ஃபிளாஷ் இல்லையெனில் இந்த வசதி இருக்காது. அதே போல Tag செய்யும் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கு மட்டும்தான். கணினியில் வாட்ஸ்அப் வெப்(WhatsApp Web) பயன்படுத்துபவர்களுக்கும் இந்த வசதி கிடையாது.
No comments:
Post a Comment