Friday, September 16, 2016



பாஸ்வேர்டை இப்படியும் உருவாக்கலாம்!

இணையச் சேவைகளை இயக்க உருவாக்குவதற்கான பாஸ்வேர்டு வலுவானதாக இருந்தால்தான் பாதுகாப்பானதாக இருக்கும். ஆனால் பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கக் கடினமாக முயற்சி செய்தால், அதை நினைவில் வைத்துக்கொள்வதும் கடினமாகலாம். அதற்காக வழக்கமாக எல்லோரும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு உத்தியையே பயன்படுத்தக் கூடாது. அதைவிட ஆபத்தானது வேறில்லை.

மிகவும் வலுவான ஆனால் எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய பாஸ்வேர்டை உருவாக்கும் எளிய வழியை ‘ரெட்டிட்' தளத்தின் பயனாளி ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எந்தச் சேவைக்காக பாஸ்வேர்ட் தேவையோ அந்தத் தளத்தின் பெயரைத் தலைகீழாக எழுத வேண்டும். இப்போது அந்த எழுத்துக்களுக்கு நடுவே உங்கள் பிறந்த நாள் எண்களை வரிசையாக இடம்பெறச் செய்ய வேண்டும். முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக மாற்றுங்கள். அவ்வளவுதான். வலுவான பாஸ்வேர்டு தயார். இதை உருவாக்கிய வழிமுறையை நினைவில் வைத்துக்கொண்டால்போதும் பாஸ்வேர்டை எளிதாக டைப் செய்துவிடலாம். ஒவ்வொரு தளத்துக்கும் இதே முறையில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனால், இந்த முறையை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு உங்களுக்கான பிரத்யேக மாற்றத்துடன் இதைப் பயன்படுத்துவது இன்னும் கூட நல்லது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024