Friday, September 9, 2016

கேலக்ஸி நோட் 7 பயன்படுத்த ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தடை


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்ஃபோனை விமானப் பயணத்தின்போது பயன்படுத்தவோ, சார்ஜ் செய்யவோ தடை விதித்துள்ளன.

சாம்சங் நிறுவனம், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தனது கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்ஃபோனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த ரக ஸ்மார்ட்ஃபோன்கள் எளிதில் தீப்பற்றுவதாக உள்ளதென்றும், பேட்டரி சார்ஜ் செய்யும்போது, வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக, சாம்சங் நடத்திய தரக்கட்டுப்பாட்டு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் விநியோகிக்கப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்களை திரும்பிப் பெறவும் சாம்சங் முடிவு செய்துள்ளது.

இந்த தகவல் சர்வதேச ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கன்டாஸ், ஜெட் ஸ்டார், விர்ஜின் போன்ற விமான சேவை நிறுவனங்கள், தங்களது விமானங்களில் பயணிக்கும் நபர்கள் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை விதித்துள்ளன.

எளிதில் தீப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதோடு, தரம் குறைந்த பேட்டரியை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், இம்முடிவை மேற்கொள்வதாக, அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. சாம்சங் நிறுவனம், அவற்றை எப்போது திரும்பப் பெறும் என்று தெரியவில்லை என்றும், அதுவரை தடை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...