Friday, October 27, 2017

வறட்சி,தண்ணீர்,பஞ்சம்,தீரும்,தமிழக மக்கள்,நம்பிக்கை

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை இன்று துவங்குகிறது. வானிலை மைய கணிப்பின்படி இரண்டு மாதங்களில் ஆண்டு சராசரியான 100 சதவீதத்துக்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலத்தை சூழ்ந்திருந்த வறட்சி, தண்ணீர் பஞ்சம் தீரும் என தமிழக மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கான தண்ணீர் தேவை தென்மேற்கு பருவமழையால் பூர்த்தியாகிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி தமிழகம் அமைந்து உள்ளதால் மலைகளால் மறைக்கப்பட்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு போதிய அளவு கிடைப்பதில்லை. அதனால் மழை மறைவு பிரதேசமாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் நம்பிக்கை ஊற்றாக வடகிழக்கு பருவமழை உள்ளது. தமிழக நீர் நிலைகளில் ஓராண்டுக்கு தேவையான நீரை சேமித்து பயன் படுத்த வழிவகுக்கிறது. 2016ல் பசிபிக் கடலில் ஏற்பட்ட 'லா நினா' சூழல் மாற்றத்தால்

தமிழகத்தில் வெறும் 38 சதவீதம் மட்டுமே வடகிழக்கு பருவ மழை பெய்தது.

அதனால் ஓராண்டாக மாநிலம் முழுவதும் விவசாயம், குடிநீர் உள்பட அனைத்து தேவைக் கும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. கல்குவாரிகளில் ஆண்டுக்கணக்கில் தேங்கிய நீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே, 30ல் துவங்கி ஐந்து மாதங்களாக பல மாநிலங்களில் பெய்தது. தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்த தமிழக மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் சராசரியாக 38 சதவீதம் அதிகமாக பெய்து அக்., 25ல் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து வடகிழக்கிலிருந்து காற்று வீச துவங்கி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

கிழக்கு திசையிலிருந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீச துவங்கி உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் உள்ளது. சில தினங்களில் காற்று படிப்படியாக வலுப் பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கும் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 44 சென்டி மீட்டர். அதை விட அதிகமாக 111 சதவீத அளவுக்கு அதாவது 49 செ.மீ., வரை மழை

பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள், பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'ஓராண்டாக நீடித்த தண்ணீர் பஞ்சம் பருவ மழையால் தீரும். நிலத்தடி நீர் மட்டமும் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளின் நீர்மட்டமும் உயரும்' என அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மழை கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு:

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களில், மழை கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும், 60 ஆயிரம், கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 89 அணைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

வடகிழக்கு பருவ மழை காலங்களில், இந்த ஏரிகளுக்கு அதிக நீர்வரத்து கிடைக்கிறது. அதிகளவு வெளியேறும் உபரிநீரால், சில நேரங்களில் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. மழையால், நெடுஞ்சாலைகள் சேதம் அடைகின்றன. இதை கண்காணித்து, உடனுக்குடன் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதற்காக, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் மற்றும் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகம் ஆகியவற்றில், 24 மணி நேரமும் செயல்படும், மழை கட்டுப் பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு
உள்ள ஊழியர்கள், மாநிலம் முழுவதும் இருந்து, மழை பாதிப்பு தகவல்களை பெற்று, அரசுக்கு அனுப்புவர்; அது தொடர்பான அரசு உத்தரவுகளை, உடனுக்குடன் மாநிலம் முழுவதும் உள்ள துறை அலுவலகங்களுக்கு தெரிவிப்பர்.

பேரிடர் தொடர்பு எண்கள்

மாநிலம் பேரிடர் மையம் - 044 - 1070
மாவட்ட பேரிடர் மையம் - 1077
போலீஸ் டி.ஜி.பி., கட்டுப்பாட்டு அறை
044 - 2844 7701
வருவாய் நிர்வாக கட்டுப்பாட்டு அறை
044 - 2852 3299
கடற்படை உதவி எண் - 044 - 2539 4240
மதுரையில் பலத்த மழை


மதுரையில் பலத்த மழை
மதுரை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை இன்று துவங்கிய நிலையில், மதுரையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்து வருகிறது

அப்பா, அண்ணா, அச்சா! 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் சேர்ப்பு


அப்பா, அண்ணா, அச்சா!, 'ஆக்ஸ்போர்டு', அகராதியில், சேர்ப்பு
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
ஆக்ஸ்போர்ட்டில் இந்திய மொழி வார்த்தைகள்
ஐதராபாத்:ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பில், அப்பா, அண்ணா, அச்சா ஆகியவை, ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன.
உலகம் முழுவதும், அதிகளவில் பயன்படுத்தும், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், 1,000 புதிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. 70 வார்த்தைகள்குறிப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் உள்ள, 70 வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன.'அண்ணா' என்ற வார்த்தை, ஆக்ஸ்போர்டு அகராதியில், ஏற்கனவே, நாணயமான, 'அணா'வை குறிக்கும் பெயர்ச்சொல்லாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, தமிழ், தெலுங்கில், மூத்த சகோதரர்களை குறிக்கும், 'அண்ணன்' என்ற சொல்லாக, அப்படியே ஆங்கிலத்தில் இடம் பெறச் செய்துஉள்ளனர்.
அதேபோல், தமிழ் மொழியில், தந்தையை அழைக்கும் வார்த்தையான, 'அப்பா' என்பதும், ஆங்கிலத்தில், அதே அர்த்தத்துடன் இடம்பிடித்துள்ளது. 'அச்சா' என்ற ஹிந்தி வார்த்தையும், சந்தேகம், வியப்பு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தையாக ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
உறவுமுறைகள்

ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் இடம்பெற்ற குறிப்பில், இந்திய மொழியில், வயது, பாலினம் மற்றும் உறவுமுறைகள் தனித்தனியாக அழைக்கப்படுவதாகவும், அவற்றுக்கு சமமான வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லாததால், சிறப்பு வார்த்தைகளாக, அவை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேலை பார்த்தபடி டாக்டர்கள் உண்ணாவிரதம்

வேலை,பார்த்தபடி,டாக்டர்கள்,உண்ணாவிரதம்,எய்ம்ஸ்,aiims
புதுடில்லி: ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை, முறையாக அமல்படுத்த வலியுறுத்தி, வேலை பார்த்தபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டது. 'பல்வேறு அரசு மருத்துவமனைகளில், இது அமல்படுத்தப்பட்டாலும், முழுமையாக செயல்படுத்தவில்லை' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளை, நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலை பார்த்த படியே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தில், 2,000 டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்



சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அக்டோபர் 27, 2017, 04:00 AM
சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கீழ்கண்ட இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

பாடி: சி.டி.எச்.ரோடு(பாடி), படவட்டம்மன் கோயில் தெரு, யாதவாள் தெரு, பஜனை கோயில் தெரு, தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, ராஜா தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வன்னியர் தெரு, மேட்டுகுளம் தெரு, அயோத்தி குப்பம், மூர்த்தி சாமி காலனி மற்றும் சுற்றுவட்டாரம்.

பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகானந்தபுரம், சுபம் நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் ஒரு பகுதி, பி.வி.வி.சாலை, தர்கா சாலை, பாரதி நகர், கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி.சாலை பல்லாவரம், பம்மல் ஒரு பகுதி, முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர்.

ராயப்பேட்டை: பீட்டர்ஸ் சாலை, ஒயீட்ஸ் சாலை, பட்டுலால் சாலை, ஆர்.ஓ.பி.மெயின் தெரு (1 முதல் 7-வது தெரு), லாயிட்ஸ் சாலை, மேயர் சிவ ராஜ் தெரு, லெனர்டு தெரு, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, அம்மயப்பன் தெரு, முத்து தெரு, காசிம் தெரு, நல்லண்ண முதலி தெரு, காலிங்கராயன் தெரு, அய்யம்பெருமாள் தெரு, ராயப்பேட்டை சாலை, சுமித் சாலை, ஜி.பி.சாலை.

ராஜ்பவன்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ரேஸ் கோர்ட்ஸ் ரோடு, ரேஸ்வியூ காலனி 1, 2, 3-வது தெரு, அண்ணா சாலை, பாரதிநகர் கிண்டி, ஐந்து பர்லாங் ரோடு, மடுவின் கரை, வேளச்சேரி மெயின் ரோடு, சக்கராபாணி ரோடு, பெரியார் நகர் 1 முதல் 10-வது தெரு வரை, நேரு நகர் 1 முதல் 4-வது தெரு வரை, அம்பேத்கர் நகர், வண்டிக்காரன் தெரு, கன்னிகாபுரம் 1 முதல் 34-வது தெரு.

செம்பியம்: மெக்டிஸ் காலனி, சத்தியராஜ் நகர், கே.கே.ஆர். நகர், கே.கே.ஆர் தொழிற் பேட்டை, கண்ணபிரான் கோயில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பர்மா காலனி, பாண்டியன் தெரு, திருவள்ளூவர் தெரு, உடையார் தோட்டம் ஒரு பகுதி, கல்கட்டா நகர், பிரான்சிஸ் காலனி, கல்பன் என்ஜினீயரிங், திருவள்ளூவர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.

மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது,

Thursday, October 26, 2017


தரைமட்டமாகும் வீடு... பறிபோகவிருந்த கிட்னி... பெண்களைப் பரிதவிக்கச் செய்யும் கந்துவட்டி! #EndKandhuVatti

vikatan 

வீ கே.ரமேஷ்
கே.குணசீலன்
ரமேஷ் கந்தசாமி



கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்ற கூலித் தொழிலாளி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தன் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம், இந்திய அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. இதே பிரச்னையால், மீனா என்ற பெண் கடந்த வருடம் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்கூட்டியே கந்துவட்டி பிரச்னையில் அரசு கவனம் செலுத்தியிருந்தால், இந்த நெல்லைக் கொடூரம் நடந்திருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

என் கணவரின் கிட்னி நாளை பறிபோகப் போகிறது!

கந்துவட்டி கொடுமை நெல்லையில் உயிர்களைப் பலி வாங்கியிருக்க, ஈரோட்டில் ஒருவரின் சிறுநீரகம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளி ஒருவரை நிர்பந்தப்படுத்தி, அவரது கிட்னியைப் பறிக்க, கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சம்பூரணம் என்ற பெண் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். கந்துவட்டி கட்ட முடியாததால் கணவரின் கிட்னியைக் கேட்டு, 22-ம் தேதி கேரளாவுக்கு அழைத்துச்சென்றுள்ளதாகக் கண்ணீரோடு கதறினார்.



இதுபற்றி நம்மிடம் பேசிய சம்பூரணம், ''நாங்க ஈரோடு காசிபாளையம் பகுதியில் குடியிருக்கோம். என் கணவர் பெயர், ரவி. எங்களுக்கு ஏழாம் வகுப்புப் படிக்கும் நிவேதா என்ற மகளும், ஆறாம் வகுப்புப் படிக்கும் விஷால் என்ற மகனும் இருக்காங்க. வீட்டுக்காரர் விசைத்தறி தொழிலாளி. நான் கார்மென்ட்ஸில் டெய்லரா இருக்கேன். வீட்டுக்காரர் தறியை லீஸ் எடுத்து ஓட்டினதில் மூணு லட்சம் ரூபாய் நஷ்டமாயிடுச்சு. அதனால், எங்க பகுதியில் உள்ள கந்து வட்டிக்காரங்ககிட்ட முப்பதாயிரம், ஐம்பதாயிரம் என மூணு லட்சத்துக்குக் கடன் வாங்கினோம். ஆனால், வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறோம். சாப்பாட்டுச் செலவுக்குக்கூடக் காசு இல்லை. குழந்தைகளுக்குத் தீபாவளிக்குக்கூட நல்ல சோறு ஆக்கித் தரலை.

ஆனால், கந்துவட்டிக்காரங்க வீடு தேடி வந்துடுறாங்க. கெட்ட கெட்ட வார்த்தையால் திட்றாங்க. இதனால், மனதளவில் நானும் புருஷனும் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தோம். இந்த நிலைமையில், அவினாசியைச் சேர்ந்த கிட்னி புரோக்கர் வந்தார். ஒரு கிட்னிக்கு 5 லட்சம் கொடுப்பதாக நிர்பந்தம் பண்ணி, 22-ம் தேதி ராத்திரி என் புருஷனையும், அவர் அப்பாவையும் கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. நாளைக்கு என் புருஷனுக்கு ஆபரேஷன் செஞ்சு கிட்னி எடுக்கப் போறதா இருந்தது. கலெக்டரோட நடவடிக்கையினால என் கணவர் நல்லபடியா திரும்பி வரப்போறாரு” என்றார் கண்ணீர் மல்க.



இதுபற்றி ஈரோடு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, ''நான் எதார்த்தமாக அந்தப் பக்கம் போனபோதுதான் விஷயம் தெரிஞ்சது. சம்பூரணத்தைப் பார்த்துப் பேசினேன். அவர் கணவரிடமும் போனில் பேசினேன். எர்ணாகுளம் மாவட்டம், நெட்டூரில் வி.பி.எஸ். லக்சூரி மருத்துவமனையில் நாளைக்கு ரவிக்கு ஆபரேஷன் செய்யப் போறாங்களாம். அவங்க அப்பாவைக் கையெழுத்து போட கூட்டிட்டு போயிருக்காங்க. இது தெரிஞ்சதும் எப்படியாவது தடுத்து நிறுத்தணும்னு முயற்சி பண்ணினேன். கலெக்டரோட நடவடிக்கையால அவரு திரும்பி வரப்போறாரு'' என்று பதறினார்.

தஞ்சாவூர், காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர், மீனா. இவருக்கு நான்கு பிள்ளைகள். இவர் கணவர் கட்டடத் தொழிலாளி. விபத்து ஒன்றில், காலில் பலத்த அடிபட்டுவிட்டது. அறுவைசிகிச்சை செய்தால்தான் குணப்படுத்த முடியும் என்கிற நிலை. என்ன செய்வதென தெரியாமல் தவித்த மீனா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு மூன்று லட்சம் கடன் வாங்கி, கணவருக்குச் சிகிச்சை அளித்தார். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர், 'உன் வீட்டை எழுதிக் கொடுத்துவிடு. விட்டுவிடுகிறேன்' எனத் தொடர்ந்து பிரச்னை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த மீனா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடி சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் அந்தச் சமயத்தில் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மீனா எப்படி இருக்கிறர்?

மீனாவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றோம். மிரட்சியோடு, ''உங்களுக்கு யார் சார் வேணும்?'' எனக் கேட்டார். நம்மை அறிமுகம் செய்துகொண்டதும், வேதனையான குரலில் பேசினார்.



''என் புருஷனுக்கு அடிபட்டு ஆபரேஷன் பண்ண வேண்டியதா இருந்துச்சு. ஒருத்தர்கிட்ட மூணு லட்சம் ரூபாயை ஐந்து பைசா வட்டிக்குக் கடன் வாங்கினேன். கடன் பத்திரத்தில் நான்கு லட்சம் வாங்கினதா எழுதிப்பேன்னு சொன்னார். வேற வழியில்லாமல் சம்மதிச்சு பணத்தை வாங்கினேன். புருஷனுக்கு ஆபரேஷன் ஆச்சு. மாசம் பதினைந்தாயிரம் வட்டி கட்டினேன். அவர் உடம்பு தேறவே ஏழு மாசத்துக்கு மேல் ஆச்சு. அதுவரைக்கும் வீட்டில் வேற வருமானம் இல்லை. ஆனாலும் கஷ்டபட்டு 11 மாசம் வரைக்கும் வட்டி கொடுத்தேன். அப்புறம், பிள்ளைகங்க படிப்பு, வீட்டுச் செலவுனு சமாளிக்க முடியலை. மூணு வேளைச் சாப்பாடு சாப்பிடவே முடியாமல், பட்டினி கெடந்தோம். ரெண்டு மாசமாக வட்டி கொடுக்கலை. அதுக்கு வட்டி போட்டு டிபிஎல் வட்டி என ஒரு மாசத்துக்குத் தினமும் மூன்றாயிரம் கேட்டாங்க. என்னால் கொடுக்க முடியலை.

அப்போ, என் புருஷன் வேலைக்குப் போக ஆரம்பிச்சதால், 'கொஞ்சம் பொறுங்க. எப்படியாவது கொடுத்துடறோம்'னு சொன்னோம். ஆனால், அவங்க தொடர்ந்து டார்ச்சர் பண்ணினாங்க. ஒருநாள், நான் வெளியே போயிருந்தப்போ வீட்டுக்கு வந்து, என் பசங்களை வெளியே தள்ளி, கதவை பூட்டிட்டுப் போய்ட்டாங்க. பசங்க அழுதுட்டே தெருவில் நின்னுட்டிருந்தாங்க. அதைப் பார்த்ததுமே என் பாதி உசுரு போயிருச்சு.

அவங்ககிட்ட போய் காலில் விழாத குறையாக கெஞ்சி, சாவியை வாங்கிட்டு வந்தேன். அப்புறம், கடன் கொடுத்த சில பேருடன் வீட்டுக்கு வந்தார். 'நீ வாங்கின கடன் வட்டியும் முதலுமா 12 லட்சம் வருது. அதை உடனடியா கொடு. இல்லைன்னா, இந்த வீட்டை எழுதிக் கொடு'னு மிரட்டினார். நான் பயந்துபோய் போலீஸுக்கு போன் செஞ்சு வரவெச்சேன். அதுக்கு அவங்க, 'கடன் வாங்கினால், திருப்பிக் கொடுக்க வேண்டியதுதானே'னு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணினாங்க. 'கொஞ்சம் டைம் கொடுங்க சார். சீக்கிரமே கொடுத்துடறோம்'னு சொல்லியிருந்தேன்'' என நிறுத்திய மீனா, ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்கிறார்.

''எப்படியாவது கடனைக் கொடுத்துடணும்னு கடவுளை வேண்டிக்க வேளாங்கன்னிக்குக் குடும்பத்தோடு போயிருந்தோம். திரும்பி வந்து பார்த்தால், வீட்டுல இருந்த பொருள்களை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டுட்டு வேற யாரையோ குடி வெச்சுட்டாங்க. 'என்ன இப்படி பண்ணீட்டீங்க?'னு கேட்டதுக்கு, 'முழு பணத்தையும் கொடு. இல்லைன்னா வீட்டை மறந்துட்டு போய்டு'னு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தோம். அப்பவும் அவங்களுக்கு ஆதரவாகவே போலீஸ் பேசினாங்க. எஸ்பி ஆபீசுக்குப் போனால், என்ன ஏதுனுகூட யாரும் கேட்கலை. எல்லோரும் கைவிட்டுட்டாங்களேனு கதறி நின்னேன். இனி வாழ்ந்து என்ன பண்ணப்போறோம் விஷ மருந்து வாங்கிக் குடிச்சுட்டேன். என் பிள்ளைகள் தாய் இல்லாமல் தவித்துடும்னு ஆண்டவன் நினைச்சாரோ என்னமோ, உயிரைக் காப்பாத்திட்டார். ஏழு நாள்கள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு வந்தேன். இது நடந்து ஒரு வருஷம் ஆகுது'' என்கிறார் மீனா.



ஆனாலும், பிரச்னை முடியவில்லை. ''என் பெரிய பையன், பத்தாம் வகுப்புல 420 மார்க் எடுத்திருந்தான். ஆனாலும், இந்தப் பிரச்னையால் தொடர்ந்து படிக்கமுடியாமல் மனநிலை பாதிப்பு வந்துருச்சு. இப்போ, அவனுக்குச் சிகிச்சை போயிட்டிருக்கு. நாங்க வாங்கின மூணு லட்சத்தைக் கொடுத்துடறோம்னு சொல்றோம். ஆனால், 'பணத்தைத் திருப்பி வாங்கத்தான் நான் கொடுத்தோமா? உன் வீட்டை நினைச்சுதான் கொடுத்தோம். உன்னால் எனக்கு நிறைய பிரச்னை வந்துருச்சு. அதனால், இந்த வீட்டுலேர்ந்து விரட்டிட்டு, இதைத் தரைமட்டமாக்கறோம்'னு சொல்றாங்க. எந்த சாமி வந்து என் பிரச்னையைத் தீர்க்குமோ தெரியலை. நெல்லையில் நடந்ததை டிவியில் பார்த்து பதறிட்டேன் சார். அப்போ, எனக்கே குடும்பத்தோடு செத்துடலாம்னுதான் தோணுச்சு. ஆனால், பெத்த பிள்ளைகளை அப்படிச் செய்ய தைரியம் வரலை. அதனால், நான் மட்டுமே தற்கொலை செஞ்சுக்கப் பார்த்தேன். இப்போ உயிரோடு இருந்தாலும், தினம் தினம் பயந்துகிட்டு, நடமாடும் பிணம் மாதிரிதான் இருக்கோம். அதுகூட எங்க குழந்தைகளுக்காக. எங்களை மாதிரி ஏழைகளை இந்தச் சட்டம் காப்பாத்த பயன்படாத சார்'' எனக் கேட்கிறர் கண்கள் கலங்க.

“யோவ் வெளியே போய்யா” - முதல்வர் பழனிசாமி விழாவில் தள்ளப்பட்ட எம்.எல்.ஏ!

JAYAVEL B

ஸ்ரீபெரும்புதூர், வல்லம்-வடகால் பகுதியில் சிப்காட் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியில் வானூர்தி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா தொடங்குவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 245 ஏக்கர் பரப்பளவில் அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, 198 கோடி மதிப்பில் தொடங்கப்படும் இந்தப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிவந்திருந்தார்.




ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டார்கள். முதலமைச்சரை வரவேற்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, வழிநெடுகிலும் முதல்வர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எல்.ஏ பழனி ஆகியோரின் படங்கள் அடங்கிய பேனர்கள் அ.தி.மு.க-வினர் வைத்திருந்தனர். மழை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட பேனர்கள் சாலைகளின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தன. இவ்விழாவில் முதல்வர் பேசவே இல்லை.




அடிக்கல்நாட்டு விழா முடிந்ததும், முதல்வர் சிற்றுண்டி சாப்பிட ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அந்த அறையின் உள்ளே சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனியும் அவர்களுடன் உள்ளே செல்ல முயன்றார். அப்போது பாதுகாப்புப் படையினர் ‘யோவ் வெளியே போய்யா’ என அவர் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார்கள். அருகிலிருந்த அமைச்சரின் உதவியாளர் ஒருவர் ஓடிவந்து, ‘தள்ளாதீங்க… இவர்தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ’ எனச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். கோபத்தில் பாதுகாப்பு போலீஸாரை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றார் எம்.எல்.ஏ பழனி.

காலியாக இருக்கும் மருத்துவர் பணியிடங்கள் எத்தனை? - நீதிமன்றம் கேள்வி

அருண் சின்னதுரை


அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிட விவரங்களை தாக்கல் செய்ய சுகாதார செயலருக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரத்தைச் சார்ந்த ராஜூ என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், "ராமநாதபுரம் கீழக்கரை அரசு மருத்துவமனையைச் சார்ந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர், ஆனால், கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர் மற்றும் ஓர் ஆய்வக நிபுணர், மருத்துவமனை ஊழியர், பிசியோதெரபிஸ்ட், இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், பிரசவ அறை உதவியாளர், குடும்ப நல அலுவலர், 2 சமையலர் பணியிடங்கள் என மொத்தம்18 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் முறையான சிகிச்சை இன்றி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காலியாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட்ட மற்றும் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை அக். 27-க்கு ஒத்திவைத்தனர்

Delhi HC relief for doctor who studied medicine in USSR, did not clear Class 12 exam

The Delhi Medical Council had rejected the doctor's application on the grounds that he did not qualify in the 10 + 2 examination and was thus ineligible for registration.

Sneha Agrawal | Posted by Dev Goswami

New Delhi, October 26, 2017 | UPDATED 06:21 IST


The Delhi high court recently granted relief to a Kashmiri medical practitioner whose registration with Delhi Medical Council (DMC) was denied on the ground that he could not clear his Class 12 examinations and studied medicine in erstwhile USSR.

Sheikh Bilal Bashir had moved HC against the communication from the state medical council claiming that he had appeared in the Class 12 examinations conducted by Jammu and Kashmir State Board of School Education in 1993, but they were cancelled on the ground of mass copying at the centre where he had taken his exam.
However, he did not appear for reexamination due to insurgencies and therefore, left the state to pursue medical studies in the former USSR.
The petitioner thereafter took admission for pursuing MD physician course in 1994 from the university recognised under the Medical Council Act.
The petitioner returned to India and interned with Government Medical College and Hospital, Jammu, from May 2002 to June 2003.
After completing his internship, the petitioner left for Riyadh in Saudi Arabia and worked as a resident doctor from August 2005 to April, 2013.
He returned to India in 2013 and undertook the screening test examination for foreign medical graduates conducted by the National Board of Examinations as per Screening Test Regulations, 2002, held in June, 2014.
The results of the said screening test were declared on August 5, 2014. The petitioner states that thereafter he approached DMC and submitted his application for the purpose of registration as a medical doctor.
However, the DMC refused to accept the petitioner's application on the ground that he did not qualify in the 10 + 2 examination and was thus ineligible for registration.
Praveen Khattar, counsel appearing for DMC, countered the submission made on behalf of the petitioner and contended that clearing 10 + 2 examination was an essential condition for undergoing higher studies and the petitioner had failed to clear his Class 12 examinations.
Setting aside the DMC's decision, Justice Vibhu Bakhru relied on the guidelines issued by Supreme Court to deal with similar cases which said a candidate would be entitled for being enrolled as a medical practitioner if he had applied for such registration prior to March 15, 2001, notwithstanding that he did not meet the minimum admission norms of MCI.

Delhi HC Rejects Student’s Plea To Change Name In Records Maintained By CBSE [Read Judgment] | Live Law

Delhi HC Rejects Student’s Plea To Change Name In Records Maintained By CBSE [Read Judgment] | Live Law: The Delhi High Court has rejected a writ petition wherein a student sought a direction to the CBSE to change his name in all the records maintained by the Board, and to issue a fresh mark-sheet and certificate of Class-X Examination passed by the student in 2015. Aditya appeared for Class-X Board Examination (All-India Secondary …

New chapter: Hyderabad High Court nod to demote Class 2 girl

DECCAN CHRONICLE. | S A ISHAQUI

PublishedOct 26, 2017, 1:21 am IST

The child’s grandmother had sought to demote the girl to Class 1 as she was not able to cope with Class 2 workload.


Hyderabad High Court

Hyderabad: Subjecting students to mental pressure is not proper, observed the Hyderabad High Court on Wednesday as it directed the principal of Hyderabad Public School to consider the request of K. Advetya, a student, for demotion from Class 2.

A division bench of Acting Chief Justice Ramesh Ranganathan and Justice J. Uma Devi was dealing with an appeal by the student, represented by her grandmother, challenging an order of a single judge dismissing their writ petition asking for the demotion as the child could not cope with the Class 2 workload.

Kommireddy Jyothi, grandmother of Advetya, had asked HPS to demote her granddaughter because she was under great mental pressure.

When the HPS management refused her request, Ms Jyothi moved the High Court, stating that the management was mentally harassing the child.

Her counsel, Kommireddy Ramulu, informed the court that the school was delaying their request for demotion so the child was unsure which class she was in.

He said that as per the rules, the child is eligible for admission in Class 1, and the management of the school was claiming that it is not a government school, though the High Court has earlier ruled that the Hyderabad Public School is a government school.

While allowing the appeal, the bench questioned how the management had arrived at the conclusion that the child was a genius and could cope with Class 2 work without having completed Class 1.

The court maintained that the decision of the management to admit a student in Class 2, who had not studied in Class 1, is not rational and asked the school management to rethink its decision.

Bangalore univ revenue drops after trifurcation


By Express News Service  |   Published: 26th October 2017 01:53 AM  |  

BENGALURU: The trifurcation of Bangalore University into Bangalore University, Bangalore Central Unviersity and Bangalore North University has left the parent university financially poor.
Recently, the state higher education department had divided colleges among the three universities based on Assembly constituencies in Bengaluru Urban and Rural. However, after the colleges came into being, the money raked in by the parent Bangalore University is set to come down as revenue-generating colleges have been allotted to Bangalore North and Central universities.

As per a copy of the order on the distribution of colleges which is available with Express, Bangalore University has 255 colleges of which 18 are government, 10 are aided and the remaining are private unaided colleges.Speaking to Express, a senior official from Bangalore University said, “Though there are more private unaided colleges under our jurisdiction, most are below average and we cannot expect revenue from them.” According to university officials, affiliation and examination fee are two major sources of revenue. “We can’t expect revenue from these colleges, and we will be forced to depend on state government’s fund,” said the official.
However, the varsity authorities have decided to wait till the distribution of human resources among the three varsities. Once the entire distribution process is completed, the university will invite applications for fresh affiliation. “We will invite applications for fresh affiliation and if we get applications, and if they meet our norms, we will approve new colleges,” the official added.
Meanwhile, Bangalore University has also been asked to transfer the affiliation fee collected from the colleges to the two new universities. “This year, the affiliation and renewal of affiliation was done by Bangalore University. As the colleges have been alloted to the new universities, we have to divide the revenue generated from the affiliation fees. We will keep the service charges and the rest will be transferred,” the official said.

Rs 2.16 cr worth property attached in bank fraud case


By Express News Service  |   Published: 26th October 2017 02:09 AM  |  

CHENNAI: The Enforcement Directorate (ED) has attached two immovable property as well as fixed deposits and bank balances worth Rs 2.16 crore under the Prevention of Money Laundering Act after an exporter along with bank officials allegedly cheated UCO Bank of Rs 14 crore, according to Joint director of Enforcement Directorate K S V V Prasad.
The agency which began investigation in the case after the Central Bureau of Investigation filed an FIR against exporter L Srinivasan and the bank officials, said immovable property in Chennai and Kerala and fixed deposits and bank balances were attached.
Prasad said investigation by ED revealed that the exporter received Rs 272 crore in the name of VLS Mining and VLS Exports in the guise of export advances and routed 75 per cent of the money to Dubai under instructions of Jibu Paul of Dubai and Mohammed Hanif Sheikh of Mumbai in the guise of merchanting trade.
The persons defrauded UCO Bank to the tune of Rs 14 crore by availing overdraft facilities and demand loans on the basis of fixed deposits opened as security for foreign letters of credit issued in Merchanting Trade.
The fixed deposits were made with the money received in the guise of export advances. The scheme of things were organised in such a way that letters of credit were devolved and amount lying in fixed deposits were appropriated against non-payment of letters of credit.
Accordingly, the overdraft and loan facilities sanctioned and further enhanced by the bank was left with no guarantee and security and the exporter failed to pay the loan amount causing loss of Rs 14 crore to the bank.
கரிக்கட்டை முதல் டிஜிட்டல் பேனர்கள் வரை... விளம்பரங்களும் விதிமுறைகளும்..!

தமிழகம் ஒரு விளம்பர விரும்பி மாநிலம்! இந்த மாநிலத்தின் கலாசாரப் பயணத்தில் விளம்பரங்களுக்கு என்றும் தனிப் பங்கு உண்டு. அதன் வடிவங்கள், வேறு வேறாக இருந்தாலும், தமிழகத்தின் நிகழ்வுகளில் விளம்பரங்கள் இல்லாமல் போகாது! விளம்பரங்களால் மட்டுமே சில நிகழ்வுகள், வரலாற்று அத்தியாயங்களாக மாறிப்போன வரலாறும் தமிழகத்துக்கு உண்டு. சாதாரண வீட்டில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சியில் இருந்து கல்யாண வீடு வரைக்கும்... கட்சிக் கிளைக்கூட்டத்தில் இருந்து பிரமாண்டமான மாநாடுகள் வரையிலும், பத்துக்குப் பத்து அளவுள்ள டீ-கடை தொடங்கி, ஷாப்பிங் மால்களின் திறப்பு விழாவுக்கும், விளம்பரங்கள் வேண்டும்; இவை அனைத்தையும் தாண்டி, துக்க வீட்டிலும்கூட சிலருக்கு கெத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு குக்கிராமங்கள், மாநகரங்கள் என்ற வேறுபாடுகள் எதுவும் கிடையாது. தமிழக மக்களின் இந்த மனோபாவத்தின் ஓரத்தில் இருந்துதான், நடிகர்களை நாடாள வைத்த வரலாறும் பிறந்திருக்க வேண்டும்.

விளம்பரங்களின் வரலாறு!




கரிக்கட்டைகளை வைத்துச் சுவர்களில் எழுதிப் பிரசாரம் செய்தது ஒரு காலம். அதன்பிறகு, சுவர்களில் வெள்ளை அடித்து, அதன்மேல் காவி, கறுப்பு, சிவப்பு, நீல நிறப் பொடிகளை கரைத்து எழுதி விளம்பரம் செய்யும் வழக்கம் பிறந்தது. இதை பேப்பர்களில் எழுதி தட்டி போர்டுகளாக வைப்பதும், சைக்கிள் டயர்களில் காகிதங்களை ஒட்டி, அதில் வண்ணங்களைக் கரைத்து எழுதி ஒட்டுவதும் இன்றும் கிராமப்புற பகுதிகளில் உண்டு. அதன்பிறகு, அந்த இடங்களை வால் போஸ்டர்கள் பிடித்தன. துண்டுப் போஸ்டர்கள், சுவர் போஸ்டர்களாக மாறின. அண்ணா காலத்திலேயே கட்-அவுட்கள் இந்த வரிசையில் இணைந்துகொண்டன. ஆனால், அவை சாதரண சிறிய சைஸ் கட்-அவுட்கள். நிலைமை அப்படி இருந்தபோதே, விளம்பரம் செய்வதற்கு சுவரைப் பிடிப்பதிலும், கட்-அவுட் வைப்பதற்கு இடத்தை ஆக்கிரமிப்பதிலும், போஸ்டருக்கு எதிர் போஸ்டர் அடிப்பதிலும் தகராறுகள், அடிதடிகள், கலவரங்கள் நடந்து... அவை கொலைகளில் முடிந்தது உண்டு. அப்படிப்பட்ட ரத்தச் சரித்திரம், தமிழக அரசியலுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் உண்டு! ஆனால், அப்போது சுவர் விளம்பரங்களால் விபத்துகள் ஏற்பட்டதில்லை; சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறியதில்லை; தூக்கி நிறுத்தப்பட்ட கட்-அவுட்கள் சரிந்து உயிர்ப் பலிகள் ஏற்பட்டதில்லை. காட்சிகள் 1990-களுக்குப் பிறகு விளம்பரங்களின் வடிவங்கள் மாறியபோது, இவை எல்லாம் நடக்கத் தொடங்கின.

பிரமாண்ட கட்-அவுட்கள்!



1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப்பிடித்து, ஜெயலலிதா முதல் அமைச்சரான பிறகு, ‘கட்-அவுட்’ கலாசாரம் எனத் தனியாக ஒரு கலாசாரம் உருவானது. ஆளுயர கட்-அவுட்கள் போய், வானுயர கட்-அவுட்கள் வந்தன. ஜெயலலிதாவுக்காக, 150 அடியில் அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் வைக்கப்பட்டன. 1992-ம் ஆண்டு மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில்தான் 150 அடி உயர கட்-அவுட்கள் அறிமுகமானது. அங்கு அதுபோல் வைக்கப்பட்ட ஒரு கட்-அவுட் சரிந்து சிலர் காயம் அடைந்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க-வின் கிளைக்கழக கூட்டம் என்றாலும், அதில் ஜெயலலிதாவின் ஆளுயர கட்-அவுட் இடம்பெறும் என்பது எழுதப்படாத விதியானது. வேறு பல இடங்களில் அதுபோல் வைக்கப்பட்ட கட்-அவுட் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் சில இடங்களில் நடைபெற்றது. 1991-96 வரை நடைபெற்ற ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் வெறுக்க, கட்-அவுட்களும் ஒரு காரணமானது. அதன்பிறகு, 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல் அமைச்சர் ஆனார். அவர் அந்த ஆட்சியில், பிரமாண்ட கட்-அவுட் விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். தி.மு.க மாநாடு நடைபெறும் திடல், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம் தவிர வேறு இடங்களில் பிரமாண்ட கட்-அவுட்களை தி.மு.க-வினர் தவிர்த்தனர்.

லித்தோ போஸ்டர்கள்!



2000-வது ஆண்டுக்குப்பிறகு, விளம்பர வரிசைகளில், லித்தோ போஸ்டர்கள் வந்து ஒட்டிக்கொண்டன. அதை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு நிகராக ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் அடித்து ஒட்டி ஊரைக் கதிகலங்க வைத்தனர். அதற்கு முன்பாக, 4 பிட், 5 பிட் கலர் போஸ்டர்களாக இருந்தவை, அதன்பிறகு 30 பிட் போஸ்டர்கள் முதல் 50 பிட் போஸ்டர்கள் என்று மாறின. திருச்சியில் 200 பிட் லித்தோ போஸ்டர்களை ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ஒருமுறை அடித்து ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், லித்தோ போஸ்டர்கள் அதிகம் செலவு பிடிக்கும் சமாசாரம். அதனால், அதற்கு அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர்களிடமே வரவேற்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், லித்தோ அச்சகங்கள் பரபரப்பாகவே இயங்கி வந்தன. அந்தப் பரபரப்பு தூள் பறந்து கொண்டிருந்த நேரத்தில், சத்தமில்லாமல் டிஜிட்டல் பேனர்கள் சந்தைக்கு வந்தன.

டிஜிட்டல் பேனர்களின் சகாப்தம்!

டிஜிட்டல் பேனர்களின் வருகை, அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பொற்காலமாகத் திகழ்ந்தன. அவர்களோடு, சமானிய மக்களின் விளம்பர மோகம் அப்பட்டமாக வெளிப்பட்டது டிஜிட்டல் பேனர் சகாப்தத்தில்தான்! வீட்டில் நடக்கும் காது குத்து, கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல... துக்க நிகழ்வுகளையும் பிளக்ஸ் பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டன. தமிழகத்தின் பிரதான நகரங்கள் அரசியல் தலைவர்களின் பிளக்ஸ் பேனர்களால் நிறைந்தன; தமிழகத்தின் சாலைகள் வாகனங்களைவிட, வணிக நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களைத்தான் கூடுதலாக சுமந்துநின்றன; தமிழகத்தின் வீதிகள் காது குத்து, கல்யாணம், கோயில் விழாக்கள், ரசிகர் மன்றங்களின் பிளக்ஸ் பேனர்களுக்குள்ளேயே குடிபுகுந்துவிட்டன. மவுண்ட்ரோடு கட்-அவுட் என்ற பழைய பெருமையை மவுண்ட் ரோடு பிளக்ஸ் பேனர்கள் தட்டிப் பறித்தன.

விபத்துகளும், பிரச்னைகளும்!



சுவர்களில் பெயின்ட் மற்றும் புளோரோசென்ட் பவுடர்களால் வரையப்படும் ஓவியங்களைப்போல... கட்-அவுட்கள் வைப்பதற்கு மெனக்கெடுவதைப்போல... பிளக்ஸ் பேனர்கள் வைக்க அதிகம் சிரமப்படத் தேவை இல்லை; வேலை எளிது. ஆனால், பெயிண்ட் விளம்பரங்களில், கட்-அவுட்களில் கிடைக்காத துல்லியமும், வண்ணங்களும் வடிவமைப்பும் பிளக்ஸ் பேனர்களில் கிடைக்கும். அதேநேரத்தில் அந்த பிளக்ஸ் பேனர்களை வாய் பிளந்து பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டியவர்கள் விபத்துக்குள்ளானார்கள். விபத்துக்களுக்கான காரணங்களில் பிளக்ஸ் பேனர்களும் போலீஸ் ரெக்கார்டில் ஒரு குற்றவாளியாகப் பதிவானது. பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களுக்கு இடம் பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. தனியார் இடங்கள், வீடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் கும்பல், குடிசை போடுவதை விட்டுவிட்டு, பிளக்ஸ் பேனர்களை வைக்கத் தொடங்கின. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை வரைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “தனியார் இடங்களில் அவர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கக்கூடாது, நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக- நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு நாள்களுக்குள் பேனரை அகற்ற வேண்டும், பேனர் வைப்பதற்கு போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும், மாநகராட்சி இல்லாத பகுதிகளில் நகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று வரைமுறைகள் வகுத்துத் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பிறகும் அவை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பது தனிக்கதை! அரசியல் கட்சிகள், மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், ரசிகர் மன்றங்கள், பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தனர். இந்த நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிளக்ஸ் பேனர்களை மையமாக வைத்து, கடந்த 23-ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது, மொத்தமாக அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்களிடம் பற்றி எரியும் பிளக்ஸ் பேனர் வெறியைத் தணிக்கத் தண்ணீர் ஊற்றி உள்ளது.

வழக்கும்... தீர்ப்பும்...



சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அண்ணாநகர் நாவலர் தெருவைச் சேர்ந்தவர் திருலோச்சன குமாரி. அவர் வீட்டின் முன்பு மதி என்பவர் வைத்த பிளக்ஸ் பேனரை அகற்றக்கோரி அவர் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 23-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேரில் ஆஜராகி, மனுதாரர் கூறுவது போன்று அவரை மிரட்டவில்லை என்றார். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், “மனுதாரர் இடத்தில் உள்ள பிளக்ஸ் பேனர் உடனடியாக அகற்றப்படும், எதிர்காலத்தில் சென்னை மாநகரம் முழுவதும் உரிமையாளர்களின் முன்அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைப்பது, தனி நபர்களுக்குச் சொந்தமான சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது தடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.

அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அதன்பிறகு அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில், “மனுதாரர் இடத்தில் உள்ள பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும். அந்த பேனரை அகற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் திறந்தவெளிகளின் அழகை சீர்குலைப்பதை தடுக்கும் சட்டப்படி, தமிழகத்தைத் தூய்மையாக, அழகாக, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். தேவையில்லாமல் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்து அதன் அழகை சீர்குலைக்கக் கூடாது. குறிப்பாக, பேனர் பிளக்ஸ் போர்டு, சைன் போர்டுகளில் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. பேனர், பிளக்ஸ் போர்டு, சைன் போர்டு ஆகியவை முறையான அனுமதி வாங்கி வைக்கப்பட்டாலும்கூட, அதிலும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படம் இடம்பெறக்கூடாது. அதை உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. அதை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பித்து இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

உயிருடன் உள்ளவர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்றால், அதை வேறு யாருக்கு வைப்பது? தங்களைத் தவிர்த்துவிட்டு, இறந்தவர்களின் படங்களைப்போட்டு, பிளக்ஸ் பேனர் வைக்க, உயிரோடு இருக்கும் எந்தத் தலைவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்; அப்படி ஒரு பேனரை அடிக்க எந்தத் தொண்டனும் சம்மதிக்கமாட்டார். தங்கள் அபிமான நடிகரின் போட்டோவைப் போடாமல், அந்த நடிகரின் ரசிகர்கள் வேறு யாருக்கு பேனர் வைக்கப்போகிறார்கள்? அதனால், இனிமேல் அவர்களுக்கும் பிளக்ஸ் அடிக்கும் வேலை மிச்சம்! உயிரோடு இருப்பவர்களுக்கு நடக்கும் காதுகுத்து, கல்யாண வீடுகளில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் படங்களைப் போட்டுத்தான் பிளக்ஸ் பேனர்களை வைத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் சுய விளம்பரம் மட்டுமே! இனி அவர்களாலும் அதைச் செய்ய முடியாது. துக்க வீடுகளில் இறந்தவரின் படத்தைப் போட்டு வேண்டுமானால், பிளக்ஸ் பேனர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லி, உயிரோடு இருப்பவர் தன் படத்தைப் போட்டுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்களைப் போட்டு பேனர் வைக்கலாமா? இல்லை அதுவும் கூடாதா? என்பது பற்றி தெளிவான விளக்கம் இல்லை. அதனால், இப்போதைக்கு அரசியல்வாதிகள், நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் அபிமானத் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை மட்டும் விதவிதமாக டிசைன் செய்து, பேனர் வைத்துக்கொள்ள மட்டும் வாய்ப்பு இருக்கிறது.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மொபைல்- ஆதாரை இணைக்க வீட்டுக்கு வந்து சரி பார்க்கும் வசதி: மத்திய அரசு புது யோசனை


புதுடெல்லி: வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வீட்டுக்கே சென்று ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு வசதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  அரசு நலத்திட்டம் மட்டுமின்றி, அனைத்து சேவைகளுக்கும் ஒரே அடையாளச்சான்றாக ஆதாரை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டும், போலி பெயர்களில் பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை முடக்கும் நோக்கிலும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த மார்ச் 23ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளன. ஆனால் நடைமுறையில் இது எளிதாக இல்லை. வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் நேரில் சென்று ஆதார் எண் இணைக்க முடியாமல் உள்ளனர். அதோடு விரல் ரேகை சரியாக இல்லாத முதியோர், நேரில் சென்றாலும் ஆதார் எண் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் மொபைல் நிறுவனங்கள் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அவர்கள் வைத்திருக்கும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்களிடம் ஆதார் சரிபார்ப்பு செய்வது நடைமுறையில் சிக்கலாக உள்ளது. அருகில் மொபைல்   - ஆதார் இணைப்பு மையங்கள் இல்லாதவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும், ஒரு முறை பாஸ்வேர்டு மூலமாகவும் ஆதார் உள்ளீடு செய்யும் வசதியை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  முன்வர வேண்டும். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஏதேனும் ஒரு எண்ணை ஆதாருடன் இணைத்திருந்தால், அதன் அடிப்படையில் மற்றொரு எண்ணையும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் சரிபார்க்கலாம். இதுபோல் ரேகை தேய்ந்து போன வயதானவர்கள் போன்றோரிடம் ஐரிஷ் கருவி மூலம் கண் கருவிழியை ஸ்கேன் செய்து ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐரிஷ் கருவி வசதியுடன் ஆதார் இணைப்பு மையங்களை அதிகமாக நிறுவி வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும். ஆன்லைன் மற்றும் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் சரிபார்ப்பது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பணியையும் எளிதாக்கும் என்றார். இதுவரை சுமார் 50 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தே பதிவேற்றம் செய்யும் வசதி இருந்தால் இணைப்பு அதிகரிக்கும். வயதானவர்களின் எண்களை இணைக்க கருவிழி ஸ்கேன் கருவி வசதி அவசியம். வாடிக்கையாளர்கள் உடனே செல்லும் தூரத்தில் பதிவு மையங்களை பரவலாக்க வேண்டும்.

ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்

ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
சென்னை - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்பட உள்ளதாக ரயில்வே கால அட்டவணையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் தனது ரயில் சேவை 2011 செப்.27-ல் தொடங்கப்பட்டது. திருவாரூர்-மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை பணி நடைபெற்றதை அடுத்து, இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சாவூருக்கு இரவு 10.15 மணி வந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு செல்கிறது. அதேபோல, சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தஞ்சாவூர் வருகிறது.
இந்நிலையில், ரயில்வே கால அட்டவணை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மன்னை எக்ஸ்பிரஸ் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் டி.சரவணன் கூறியபோது, “இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகவே இயக்கப்படும் என திருச்சியில் நடைபெற்ற ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக திருவாரூர் வழியாக இயக்கப்பட உள்ளது. இதனால் திருவாரூர் ரயில் நிலையம் மட்டுமே பயன்பெறும்” என்றார்.
தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்க சட்ட ஆலோசகர் ஜீவகுமார், “இந்த ரயிலை தஞ்சாவூர் வழியாகவே மீண்டும் இயக்க வேண்டும். இல்லாவிட்டால், தஞ்சாவூர்- மயிலாடுதுறை இடையே இணைப்பு ரயில் இயக்க வேண்டும்” என்றார்.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடி எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு


திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிர்வகிப்பதில் இரு தரப்புக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால், அக்கல்லூரியில் பயின்ற 17 மாணவர்கள் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில், ‘‘வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தயங்குகிறது. சில நேரங்களில் காவல் துறையும் அவர்களுடன் கைகோர்த்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது. தமிழகத்துக்கு வெளியே உள்ள லெட்டர்பேடு சட்டக் கல்லூரிகளில் சட்டப் பட்டத்தை விலை கொடுத்து வாங்கும் சிலர்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எத்தனை சட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். அதில் எத்தனை பேர் வெற்றிகரமாக படிப்பை முடித்துள்ளனர். எத்தனை பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை அகில இந்திய பார் கவுன்சில் சமர்ப்பிக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மீது காவல்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்புத் தலைவராக பதவி வகிக்கும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவரான வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழக பார் கவுன்சிலில் 713 பேர் பள்ளி, கல்லூரி படிப்பை பூர்த்தி செய்யாமல், நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்ஏ பட்டம் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, அவர்களின் வழக்கறிஞர் பதிவை உடனடியாக ரத்து செய்ய நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். ஆவணங்களே இல்லாத 42 வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார் கவுன்சில் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சரிபார்ப்பதில்லை.
தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை. எனவே, அரசு தலைமை வழக்கறிஞர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் இருக்கக் கூடாது. அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உண்மையான வழக்கறிஞர்களை வைத்துதான் பார் கவுன்சிலையும் நடத்த வேண்டும் என்பதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தார்.
இந்நிலையில், 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு, அவர்களின் கல்விச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து பார் கவுன்சில் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்புக்கு முன்பே கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்பு வெளியானது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை, ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்படும். ஒவ்வொரு முறையும் கால அட்டவணை அறிவிக்கும்போது புதிய ரயில்கள் அறிவிப்பு, ரயில்களின் நேரம் மாற்றம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள், ரயில் எண்கள் மாற்றம் உள்ளிட்டவை அதில் இடம் பெற்றிருக்கும்.

நவம்பர் 1-ம் தேதி
இந்த ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி புதிய அட்டவணை வெளியிடப்படும் என்றும் அதுவரை தற்போதைய ரயில் கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்பிறகு, ரயில் கால புதிய அட்டவணை வெளியீடு நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தெற்கு ரயில்வே இன்னும் கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், நேற்று முன்தினம் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் புதிய கால அட்டவணை பட்டியல் வெளியாகியுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள புதிய கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்புகளில் ஒரு சில மாற்றம் இருக்கும். எனவே, இறுதி செய்த பிறகு தெற்கு ரயில்வே முழு விவரங்களுடன் அறிவிக்கும். மேலும், கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்’’ என்றனர்.

மறுப்பு தெரிவிக்கவில்லை

இதுதொடர்பாக டிஆர்இயு உதவி தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
ரயில்வேயில் காலஅட்டவணை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது என்பது முக்கியமானதாகும். குறிப்பாக, புதிய ரயில்கள் அறிவிப்பு என்பது மக்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கிடையே, புதிய கால அட்டவணை, புதிய ரயில்கள் அறிவிப்பு நேற்று முன்தினம் தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து தெற்கு ரயில்வே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக உண்மை நிலவரத்தை தெற்கு ரயில்வே தெரிவிக்க வேண்டும் என்றார்.

ராஜபாளையத்தில் ஒரு மணி நேரமாக கனமழை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. விருதுநகர், திருச்சி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

5-hour closure of airport for arat

The Thiruvananthapuram international airport will remain closed for five hours from 4 p.m. on October 28 on account of the movement of the ‘arat’ of the Sree Padmanabha Swamy temple through the operational area of the airport to Shanghumughom.
All flight operations from 4 p.m. to 9 p.m. had been suspended. Air India, the national carrier, has rescheduled three of its flights departing during the period on Saturday.
Rescheduled
AI 967 flight from Thiruvananthapuram to Sharjah will depart at 10 a.m. instead of 8.35 p.m.
The AI 264 flight from Thiruvananthapuram to Delhi will depart from here at 10 p.m. instead of 7.15 p.m.
The AI 668 flight from Thiruvananthapuram to Mumbai will depart from here at 10 p.m. instead of 8.15 p.m.
The passengers who have booked seats in these flights are requested to contact Air India Toll Free number 1800 180 1407 or 471 2310310, 2316023, 2500008 for assistance.

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...