Friday, October 27, 2017


அப்பா, அண்ணா, அச்சா! 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் சேர்ப்பு


அப்பா, அண்ணா, அச்சா!, 'ஆக்ஸ்போர்டு', அகராதியில், சேர்ப்பு
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
ஆக்ஸ்போர்ட்டில் இந்திய மொழி வார்த்தைகள்
ஐதராபாத்:ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பில், அப்பா, அண்ணா, அச்சா ஆகியவை, ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன.
உலகம் முழுவதும், அதிகளவில் பயன்படுத்தும், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், 1,000 புதிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. 70 வார்த்தைகள்குறிப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் உள்ள, 70 வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன.'அண்ணா' என்ற வார்த்தை, ஆக்ஸ்போர்டு அகராதியில், ஏற்கனவே, நாணயமான, 'அணா'வை குறிக்கும் பெயர்ச்சொல்லாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, தமிழ், தெலுங்கில், மூத்த சகோதரர்களை குறிக்கும், 'அண்ணன்' என்ற சொல்லாக, அப்படியே ஆங்கிலத்தில் இடம் பெறச் செய்துஉள்ளனர்.
அதேபோல், தமிழ் மொழியில், தந்தையை அழைக்கும் வார்த்தையான, 'அப்பா' என்பதும், ஆங்கிலத்தில், அதே அர்த்தத்துடன் இடம்பிடித்துள்ளது. 'அச்சா' என்ற ஹிந்தி வார்த்தையும், சந்தேகம், வியப்பு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தையாக ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
உறவுமுறைகள்

ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் இடம்பெற்ற குறிப்பில், இந்திய மொழியில், வயது, பாலினம் மற்றும் உறவுமுறைகள் தனித்தனியாக அழைக்கப்படுவதாகவும், அவற்றுக்கு சமமான வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லாததால், சிறப்பு வார்த்தைகளாக, அவை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...