Monday, February 18, 2019

தமிழகத்தில், நான்கு இடங்களில், வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில், நான்கு இடங்களில்,
வெயிலின் அளவு, செல்ஷியஸில், 37 டிகிரி; பாரன்ஹீட்டில், 100 டிகிரியை தாண்டியது.நவம்பர் முதல், மூன்று மாதங்களாக நிலவிய குளிர்காலம், பிப்ரவரியில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, குளிரின் அளவு குறைந்து, பகல் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரவு வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது.நேற்று மாலை, 5:00 மணிக்கு, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பட்டியலின்படி, மதுரை, சேலம், திருத்தணி, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில், 37 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. பாரன்ஹீட்டில், 100 டிகிரியை தாண்டியுள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில், 33 டிகிரி செல்ஷியஸ், விமான நிலையத்தில், 34 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், போடி மற்றும் பேச்சிப்பாறையில், தலா, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.இன்றைய வானிலையை பொறுத்தவரை, 'இன்றும், நாளையும், சில இடங்களில் லேசான மழை பெய்யும். பிப்., 19 மற்றும், 20ம் தேதிகளில், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024