Sunday, February 24, 2019

ஜூன் மாதத்துக்குள்ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு



ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 24, 2019 03:00 AM
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

2019-2020-ம் ஆண்டுக்கான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை வருகிற மார்ச் மாதம் முதல் ஜூன் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி 1979-ம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் வருகிற மார்ச் மாதமும், 1980-1989 ஆண்டு வரை ஓய்வுபெற்றவர்கள் ஏப்ரல் மாதமும், 1990-1999-ம் ஆண்டு வரையிலான ஓய்வு பெற்றோர் மே மாதமும், 2000-2019-ம் ஆண்டு வரையிலான ஓய்வூதியதாரர்கள் ஜூன் மாதமும் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்-2018 படிவத்தை சமர்ப்பிக்காதவர்கள், உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்போது ஓய்வூதியர்கள், கணவன்- மனைவி புகைப்படம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது 2 குடும்ப புகைப்படங்களையும், ஆதார் அட்டை நகல்களையும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024