Thursday, February 28, 2019


பெண் டாக்டருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

Added : பிப் 27, 2019 22:16

சென்னை,தமிழக சுகாதாரத் துறையில், முதல் முறையாக, பெண் டாக்டருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.மாநில சுகாதார சங்க இணை இயக்குனர், எஸ்.உமா. இவர், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., படித்துள்ளார். 1995ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, சுகாதார அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.பொது சுகாதாரத் துறை துணை இயக்குனராக, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். நான்கு ஆண்டுகளாக, மாநில சுகாதார சங்கத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், உமாவிற்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறையில், பெண் டாக்டர் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெறுவது, இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024