Wednesday, February 27, 2019

நோட்டீஸ்!'

10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை..
லோக்சபா தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி

சென்னை: லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.



லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்தல், தமிழகத்தில், ஏப்ரலில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பட்டியல்

பொது தேர்தலின் போது, ஓட்டு பதிவுக்கான பணிகள், ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, மாவட்ட வாரியாக பெயர், பதவி விபரங்கள் அடங்கிய

பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கு, அ.தி.மு.க., தரப்பில், எதிர்ப்பு எழுந்துள்ளது.ஆசிரியர் சங்கங்களின் சில நிர்வாகிகளும், ஆசிரியர்களும், தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு, தேர்தல்கமிஷனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், எந்த முடிவும் எடுக்கவில்லை.

தரவில்லை

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விபரங்களுடன், விண்ணப்பம் பெற, பள்ளி கல்வி துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. ஒரு வாரமாக, மாவட்ட வாரியாக, பள்ளிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தேர்தல் பணிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டங்களிலும், தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்காத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ளது.அவர்களிடம், தேர்தல் பணியை புறக்கணிப்பது ஏன் என்பதற்கு, உரிய பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு, அவசர நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, முதற்கட்டமாக, 10 ஆயிரம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியது அவர்களின் கடமை. கடமையை செய்யாமல், 'டிமிக்கி' கொடுத்தால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...