Added : பிப் 23, 2019 04:13
ஸ்ரீவில்லிபுத்துார்: தற்போது வாரம் இருநாட்கள் இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், பிப்.25 முதல் வாரம் 3 நாட்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தற்போது சென்னை எழும்பூரிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8:40 மணிக்கு புறபட்டு விழுப்புரம், திருச்சி, புதுகோட்டை,காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோயில், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறுநாள் காலை 9:50 மணிக்கு வந்தடையுமாறு வாரம் இருநாட்கள் மட்டும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.அதிகரித்து வரும் தென்மாவட்ட பயணிகளின் வசதிக்கேற்ப தினசரி ரயிலாக சிலம்பு எக்ஸ்பிரஸை இயக்கவேண்டுமென மக்கள்பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை எழுப்பி வந்தனர்.வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும்இந்நிலையில் பிப்.25 முதல் வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயங்கும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன், சனிக்கிழமைகளில் சென்னை எழும்பூரிலிருந்தும், செவ்வாய், வியாழன், ஞாயிற்றுகிழமைகளில் செங்கோட்டையிலிருந்தும், தற்போது வழக்கத்திலுள்ள நேரத்தில் புறபட்டு, வழக்கமான வழித்தடத்தில் இயங்கும் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment