போரூர்: எரிந்த 200க்கும் மேற்பட்ட கார்களில் 15 கார்களுக்கு தான் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாம்..!
By DIN | Published on : 24th February 2019 07:40 PM |
சென்னை போரூர் அருகே உள்ள தனியார் கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது. எரிந்த கார்களில் 15 கார்களுக்கு மட்டும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார் குடோனில் உள்ள காலியிடத்தில் 500க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைக்கிடங்கில் தீப்பற்றி, பின்னர் அது கார் குடோனிற்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் கார் குடோனில் காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் 200க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்து வந்த தீயை கடுமைாயாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
கார் எரியும் பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் சம்மந்த இடத்தில் சூழ்ந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட கார்களில் 20 முதல் 25 கார்கள் மட்மே தீயிலிருந்து தப்பித்துள்ளன. எரிந்த கார்களில் 15 கார்களுக்கு மட்டும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப் படைத்தளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 300 கார்கள் எரிந்து நாசமானது. இந்த நிலையில் தற்போது சென்னையில் அதேபோல ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment