Wednesday, February 27, 2019

கோடைக்கு முந்தைய வெப்பம் அதிகரிப்பு : சேலத்தில், 102 டிகிரி வெயில் கொளுத்தியது

Added : பிப் 26, 2019 23:59

சென்னை: தமிழகத்தில், வெயில் அதிகரித்துள்ள நிலையில், நேற்று சேலத்தில் அதிகபட்சமாக, 102 டிகிரி பாரன்ஹீட்டில், வெயில் கொளுத்தியது.தமிழகத்தில், குளிர் காலம் முடிந்து, ஒரு மாதமாக, கோடைக்கு முந்தைய இளவேனில் காலம் நிலவுகிறது. வெயிலின் அளவு மிதமாக இருந்த நிலையில், இந்த வாரம், படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரவு வெப்ப நிலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.இரவில், தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில், அதிக புழுக்கத்துடன் வறண்ட வானிலை நிலவுகிறது. சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில், இரவில் லேசான கடற்காற்றுடன் மிதமான வெப்பநிலை உள்ளது.நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, கரூர் மாவட்டம், பரமத்தி மற்றும், சேலத்தில், 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இது பாரன்ஹீட்டில், 102 டிகிரி. குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 22 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது.கோவை, மதுரை, திருச்சி, திருத்தணி, 37; பாளையங்கோட்டை, 36; சென்னை, கடலுார், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களை பொறுத்தவரை, தென்மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால், தமிழக கடலோர பகுதிகளின் சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024