'டிவி' சானல் விவகாரம் : 'டிராய்' புதிய உத்தரவு
Added : பிப் 24, 2019 23:58
புதுடில்லி: 'குறிப்பிட்ட, 'டிவி' சானல்கள், அதற்கான பிரிவின் கீழ் மட்டுமே இருக்க வேண்டும்; மேலும் ஒரு இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்' என, சானல் வினியோகஸ்தர்களுக்கு, 'டிராய்' எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.விரும்பிய சானல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் முறையை, பிப்., 1 முதல் அறிமுகம் செய்வதாக, டிராய் உத்தரவிட்டிருந்தது.நாட்டில் மொத்தமுள்ள, 17 கோடி, 'டிவி' இணைப்புகளில், ஒன்பது கோடி இணைப்புகள் மட்டுமே புதிய நடைமுறைக்கு மாறின. மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், வரும், மார்ச், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், டிராய், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:'டிவி' சானல்களை கட்டுப்படுத்தும் வகையிலான நடைமுறைகள், 2018 ஜூலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ஒரு குறிப்பிட்ட, 'டிவி' சானல், எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதை அவர்களே குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த சானல்கள் தொகுப்பாக இருக்க வேண்டும்.மேலும் ஒரு குறிப்பிட்ட சானல், ஒரு இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.ஆனால், 'டிவி' சானல்கள் இணைப்புகளைத் தரும் வினியோகஸ்தர்கள் இதை கடைப்பிடிப்ப தில்லை என புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே அளித்துள்ள உத்தரவை மீறும் வினியோகஸ்தர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment