பல்கலை துணைவேந்தருக்கு ஆணையம் 'நோட்டீஸ்'
Added : பிப் 27, 2019 03:29
சென்னை: சென்னை பல்கலையின் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பதிலளிக்க, துணைவேந்தருக்கு, மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சென்னை பல்கலையின், மதர் தெரசா பெண்கள் விடுதியில், 250 மாணவியர் தங்கியுள்னர். அங்கு, சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரமற்ற கழிப்பறையால், வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக, விடுதி மாறியுள்ளது.இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:சென்னையில் பல்கலையின், மாணவியர் விடுதியில், தனி மனிதனுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டு இருக்கின்றனவா, அந்த விடுதியில், சுகாதாரமான குடிநீர், உணவு மற்றும் கழிப்பறை வசதிகள் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. இவை குறித்து, பல்கலையின் துணைவேந்தர், உயர்கல்வி துறை செயலர், மதர் தெரசா விடுதி வார்டன் ஆகியோர், நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment