Monday, February 25, 2019


நடுவானில் பயணம்; தூங்கி வழிந்த விமானி

Added : பிப் 25, 2019 05:06

தைபே : சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, கிழக்கு ஆசிய நாடான தைவானைச் சேர்ந்த, சீன விமான நிறுவனத்தின் விமானம், நடுவானில் பறந்தபோது, அதன் விமானி தூங்கி வழிந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தூங்கி வழிந்த விமானி, வாங்க் ஜியாகி மீது தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, சீன விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வீடியோ எடுத்த, சக விமானி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த பயணத்தின்போது, விமானி தூங்கி வழிந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024