பாரத ரத்னா, பத்ம விருது: பெயருடன் சேர்க்க தடை
Added : பிப் 12, 2019 21:40
புதுடில்லி: 'பாரத ரத்னா, பத்ம விருதுகளை, தங்கள் பெயருடன் அடைமொழியாக சேர்க்கக் கூடாது; முறைகேடாக பயன்படுத்துவோரிடம் இருந்து, விருதுகள் வாபஸ் பெறப்படலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, எழுத்து மூலம் அளிக்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் அளித்த பதில்:தேசிய அளவில் அளிக்கப்படும், பாரத ரத்னா, பத்ம விருதுகள், அரசியல் சாசனப்படி, தங்கள் பெயருடன், அடைமொழியாக சேர்க்கக் கூடியதல்ல. பாரத ரத்னா, பத்ம விருதுகளை முறைகேடாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டோரிடம் இருந்து, விருதை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படலாம். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க முடியும்.அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், விருது தொடர்பான அரசு பதிவேட்டில், சம்பந்தப்பட்டோர் பெயர் நீக்கப்படும்; நடவடிக்கைக்கு ஆளான நபர், அரசிடம் விருதை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment