கல்வி தரம் மீது விளையாடாதீர்கள்; சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
மாற்றம் செய்த நாள்: பிப் 19,2019 04:47
புதுடில்லி : 'மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்' என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லுாரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சோதனை நடத்த சமீபத்தில் சென்றனர். அப்போது கல்லுாரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லுாரி மீது இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் உத்தரவு:
கல்வி என்பது சிலருக்கு பணம் சம்பாதிக்கும் தொழிலாக இருக்கலாம். ஆனால் அதன் தரத்தை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment