Thursday, April 18, 2019

நாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' எஸ்.எம்.எஸ்.,சில் மார்க்

Added : ஏப் 17, 2019 23:05

சென்னை, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, நாளை காலை, 9:30 மணிக்கு, அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தபோது வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்.,சில், முடிவுகள் அனுப்பப்படும்.மேலும், www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும், dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.மேலும், தங்களின் பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள், 20ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள்பள்ளிக்குச் சென்று, தற்காலிக மதிப்பெண் பட்டியலை,இணையதளத்தில்பதிவிறக்கம் செய்யலாம்.தனித் தேர்வர்கள், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன், 6 முதல், 13 வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும். இந்த தகவலை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...