வண்டலூர் பூங்காவுக்கு ஏப்.18-இல் விடுமுறை
By DIN | Published on : 16th April 2019 06:00 AM
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, வரும் வியாழக்கிழமை (ஏப்.18) வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில், வியாழக்கிழமை (ஏப். 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பராமரிப்புப் பணிக்காக பூங்கா வழக்கம்போல், செவ்வாய்க்கிழமையும் (ஏப். 16) மூடப்படும் என பூங்கா நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment