'ஆன்லைன்' ஓட்டு? தூதரகம் விளக்கம்
Updated : ஏப் 16, 2019 01:23 | Added : ஏப் 16, 2019 01:22
புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆன்லைன்' வழியாக ஓட்டளிக்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
'லோக்சபா தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆன்லைனின் ஓட்டளிக்கலாம்' என்ற தகவல், சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. இதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டுக்கான இந்திய துாதர் விபுல் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 'ஆன்லைனில்' ஓட்டளிக்க முடியாது. தேசிய வாக்காளர் சேவை தளத்தில் பதிவு செய்தவர்களின் பெயர், தொகுதியின் வாக்காளர் பட்டியலிலும் இருப்பது உறுதியானால், அவர்கள் நேரடியாக, தொகுதிக்கு சென்று ஓட்டளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment