பாலிடெக்னிக்குகளுக்கு 38 நாள் விடுமுறை
Added : மே 14, 2019 00:07
சென்னை தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, 38 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, 'செமஸ்டர்' தேர்வுகள் முடிந்துள்ளன. மே, 10ம் தேதி முதல், அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும் கோடை விடுமுறை என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.மொத்தம், 38 நாட்கள் விடுமுறை முடிந்து, ஜூன், 17ல் மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படும். இடைப்பட்ட நாட்களில், பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடுவர்.அதேபோல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள், அதில் ஈடுபட வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment