இரவு பயணத்தில் அதிக நகை வேண்டாம்: ரயில்வே
Added : மே 14, 2019 01:14திருப்பூர், 'ரயிலில் பயணிக்கும் பெண்கள் அதிக நகைகளை அணிந்து வரக்கூடாது; கவனமாக இருக்க வேண்டும்' என ரயில்வே ஸ்டேஷன்களில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.கடந்த 3 மற்றும் 4ம் தேதி இரவு ஈரோடு - சேலம் வழித்தடத்தில் மகுடஞ்சாவடி - மாவேலிபாளையம் இடையே சென்னை நோக்கி சென்ற ரயிலில் பெண்களிடம் 31 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் 20 கி.மீ. வேகத்தில் செல்வதால் எளிதில் பெட்டியில் ஏறும் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியது. ரயில்வே போலீசாரின் விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது உ.பி.யைச் சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரிந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.இந்நிலையில் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு திருப்பூர் கோவை ஸ்டேஷன்களில் பெண் பயணியரை எச்சரிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படுகிறது.ரயில் வரும் நேரங்களில் 'அதிக நகைகளை அணிந்து வரக் கூடாது; கவனமாக இருக்க வேண்டும். துாங்கும் போது நகைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும். இரவு நேர ரயிலில் தனியே பயணிக்கும் போது பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவினால் போலீஸ் உதவியை உடனே நாடலாம்' என்ற அறிவிப்பும் வெளியாகிறது.
No comments:
Post a Comment