மின்தடை இறப்பில் டாக்டர்கள் கூறுவது பொய்டாக்டர்கள் சங்க மாநில தலைவர் குற்றச்சாட்டு
Added : மே 14, 2019 00:59
சிவகாசி, ''மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் இறப்பு குறித்து டாக்டர்கள் சொல்லும் காரணம் முற்றிலும் பொய்யானது,'' என டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலர் ரவீந்தரநாத் கூறினார்அவர் கூறியதாவது:மதுரை மருத்துவமனையில் 5 பேர் இறந்தது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். அரசின் தவறுதலால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்வெர்ட்டர் செயல்படவில்லை. மருத்துவமனையில் பணிபுரியும் எலக்ட்ரீசியன் தகுதியானவர் இல்லை. அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது.அரசு மருத்துவமனைகள் சரியாக செயல்படவில்லை. மருந்து, குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மருத்துவமனை பொருட்களை பராமரிப்பதில்லை. இதை வலியுறுத்தி சென்னையில் மே 15 ல் போராட்டம் நடக்கும், என்றார்.நிவாரணம் கோரி மனுமதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரவீந்திரன் மனைவி மயிலேஸ்வரி நிவாரணம் கோரி விருதுநகர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரியிடம் மனு அளித்தார்.அதில், '5 பேர் உயிர் பறிபோனதற்கு மருத்துவமனை நிர்வாகம்தான் காரணம். எங்களது குடும்பம் ஏழ்மையில் உள்ளது. மகள் படிப்புக்கும், குடும்ப செலவுக்கும் பணமின்றி சிரமப்படுகிறோம். நிவாரண தொகை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment