சேலத்தில் குழந்தை விற்பனை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை
Added : மே 14, 2019 01:03
சேலம், சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடந்த குழந்தை விற்பனை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய விசாரணை நடத்திவருகின்றனர்.சேலம் மேச்சேரியைச் சேர்ந்தவர் ராணி 32. இவரது முதல் கணவர் இறந்து விட்டார்.இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவதாக பாலு 35 என்பவரை திருமணம் செய்தார். இரண்டாவது கணவர் மூலம் 2018 மே மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளதால் நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்தார். அரசு மருத்துவமனையில் துப்புரவுபணி மேற்கொண்ட ஜெயா 42 என்பவரிடம் தெரிவித்தார்.பிறந்த ஐந்தாவது நாளில் பெண் குழந்தை ராமநாதபுரத்தில் உள்ள டாக்டருக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.10 நாட்களுக்கு பின் ராணி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்து விற்ற குழந்தையை பார்க்க வேண்டும் என ஜெயாவிடம் கூறி உள்ளார்.ஜெயா 'குழந்தையை வாங்கிச் சென்றது யார் என தெரியாது' எனக் கூறி விட்டார். இதனால் கோபமடைந்த ராணி மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து குழந்தையை உடனடியாக ஒப்படைத்ததால் வழக்கு பதிவு செய்யவில்லை. ஜெயாவை பணியில் இருந்து தனியார் நிறுவனம் நீக்கியது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தைவிற்பனை கும்பல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டனவா என ரகசியமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments:
Post a Comment