Wednesday, May 8, 2019

முதுநிலை மருத்துவ படிப்பு 66 இடங்கள் நிரம்பின

Added : மே 07, 2019 21:56


கோவை : முதுநிலை மருத்துவ படிப்பில், 66 இடங்கள் நிரம்பின; 71 இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,761 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 849 இடங்கள் போக, மீதமுள்ள, 912 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரியில், மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 181 என, மொத்தம், 1,093 இடங்களுக்கான, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.இதில், 'நான் கிளினிக்கல்' எனப்படும் மயக்கவியல், உடற்கூறியல் போன்ற படிப்புக்கான, 137 இடங்கள் நிரம்பாமல் இருந்தன.

இந்த இடங்களை நிரப்ப, 'மாப் - அப்' எனும், சிறப்பு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கியது.இதில், 2,711 மாணவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது; 859 பேர் பங்கேற்றனர். 66 பேர் இடங்கள் பெற்றனர். அரசு மருத்துவ கல்லுாரியில், 19 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 52 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இன்றும் கவுன்சிலிங் நடக்கிறது.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...