மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல்
Added : மே 08, 2019 22:10
கரூர் : கரூர், அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.கரூர் அருகே, கொளந்தானுாரில், மருத்துவக் கல்லுாரி கட்டப்படுகிறது. பிரமாண்டமான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவக் கல்லுாரியின், நிர்வாக அலுவலக கட்டடம் கட்டும் பணி நிறைவு பெற்று தயாராக உள்ளது.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டில், 150 மாணவ - மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கான ஒப்புதலை, இந்திய மருத்துவ கவுன்சில் நேற்று முன்தினம் இரவு வழங்கியது. மருத்துவ கல்லுாரி டீன், ரோஸி வெண்ணிலா கூறுகையில், ''கரூர் மருத்துவக் கல்லுாரி, நடப்பு ஆண்டு முதல் செயல்படும். அதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது. கவுன்சிலிங்கில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பெயர் இடம் பெறும்,'' என்றார்.

No comments:
Post a Comment