Thursday, May 9, 2019

திருவாரூர் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்க அவசர அனுமதி

Added : மே 08, 2019 22:21

தஞ்சாவூர் : திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்க, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைபூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே, 187 கி.மீ.,க்கு மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.முதற்கட்டமாக, காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு, 2018 ஜூலையிலிருந்து வாரத்திற்கு இரண்டு முறை சோதனை ரயில் இயக்கப்பட்டது. எதிர்ப்பார்த்த வரவேற்பு இல்லாததால், ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே, மார்ச், 29 முதல், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான ரயில் சேவை துவங்க அனுமதி கோரி, ரயில்வே நிர்வாகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது; ரயில் சேவை துவங்குவதற்கு, தேர்தல் ஆணையமும் ஒப்பதல் அளித்துள்ளது.இதையடுத்து, பயணியர் ரயில், திருவாரூரிலிருந்து காலை, 8:15 மணிக்குப் புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு, 11:30 மணிக்கு வந்து சேரும்.

அங்கிருந்து, 11:32 மணிக்கு புறப்பட்டு, மதியம், 2:15 மணிக்கு காரைக்குடி சென்ற அடையும்.மறு மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து, பகல், 2:30 மணிக்குப் புறப்பட்டு, பட்டுக்கோட்டைக்கு, மாலை, 5:18 மணிக்கும், அங்கிருந்து மாலை, 5:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு திருவாரூக்கும் சென்றடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர், கிரி கூறியதாவது:திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை, 74 லெவல் கிராசிங்குகள் உள்ளன. அதற்கான கேட் கீப்பர்கள் இதுவரை நியமிக்கவில்லை.

மேலும், அதிராம்பட்டினம், தில்லைவாளகம், திருத்துறைப்பூண்டி ஆகிய ஸ்டேஷனுக்கு இதுவரை ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் விற்பனையாளர் நியமனம் செய்யவில்லை.இருப்பினும், தேர்தல் ஆணையத்திடம் அவசர கதியில் சிறப்பு ரயில் இயக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

‘High cholesterol, BP signal deeper issues’

‘High cholesterol, BP signal deeper issues’  TIMES NEWS NETWORK  04.10.2024  Ahmedabad : Lalit Kapoor, founder and director of the US-based ...