Thursday, May 9, 2019

முதுநிலை மருத்துவ படிப்பில் 85 இடங்களில் சேர ஆளில்லை

Added : மே 08, 2019 23:23

சென்னை : முதுநிலை மருத்துவ படிப்பில், 'மாப் - அப்' என்ற, சிறப்பு கவுன்சிலிங் நடத்தியும், சேர ஆளின்றி, 85 இடங்கள் காலியாக உள்ளன.அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கு, மாநில ஒதுக்கீட்டிற்கு, 912 இடங்கள் உள்ளன. இவற்றுடன், தனியார் மருத்துவ கல்லுாரியில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு உள்ள, 181 இடங்கள் என, மொத்தம், 1,093 இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இவற்றில், கிளினிக்கல் அல்லாத மயக்கவியல், உடற்கூறியல் போன்ற படிப்புகளுக்கான, 137 இடங்கள் காலியாக இருந்தன.

இந்த இடங்களை நிரப்ப, 'மாப் - அப்' எனும், சிறப்பு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது.இதில், ஒதுக்கீடு பெற்றும், 303 பேர் கல்லுாரியில் சேராததால், இந்த இடங்களும் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டன. இதனால், காலியிடங்கள் அதிகரிகரித்தன.நேற்று நடந்த கவுன்சிலிங்கில் அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ள, அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில், 49; நிர்வாக ஒதுக்கீட்டில், 36 என, 85 இடங்கள் நிரம்பவில்லை.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன், ''காலி இடங்களை நிரப்புவது குறித்து, மத்திய மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் ஆலோசனை பெற்று, ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

‘High cholesterol, BP signal deeper issues’

‘High cholesterol, BP signal deeper issues’  TIMES NEWS NETWORK  Ahmedabad : Lalit Kapoor, founder and director of the US-based PBW Foundati...