Thursday, May 9, 2019

துணைவேந்தர் தேடல் குழுவிற்கு தடை கோரி வழக்கு

Added : மே 09, 2019 01:12

மதுரை : கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு அமைத்து வெளியான அரசாணைக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை காமராஜ் பல்கலை முதல்வர்கள் சங்க கவுரவ பொதுச் செயலாளர் இஸ்மாயில் தாக்கல் செய்த பொதுநல மனு:கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய மாலதி மஞ்சுளா பிரேமா ஆகிய பிரதிநிதிகள் கொண்ட தேடுதல் குழு அமைத்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை வெளியிட்டார்.

இதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மாலதி சென்னை தனியார் சுயநிதிக் கல்லுாரி முதல்வர். இவரை விதிகள்படி தேடுதல் குழுவில் நியமிக்க முடியாது.தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் துணைவேந்தர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது சட்டவிரோதம். அன்னைதெரசா மகளிர் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய மற்றும் நியமிக்க தடை கோரி ஏற்கனவே நான் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. தேடுதல் குழு அமைத்து வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு இஸ்மாயில் மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் எம்.தண்டபாணி அமர்வு பல்கலை வேந்தர் தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அன்னை தெரசா பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...